நிலவுக்கான பந்தயம் வேகமெடுத்துள்ளது. அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதை லட்சியமாக வைத்துள்ளனர். இதில் யார் முதலில் அனுப்புவது என்ற கேள்வியே இங்கு உள்ளது. அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்திற்குப் பிறகு கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நிலவுக்கான போட்டி உலக நாடுகளிடையே தொடங்கி உள்ளது.
லேண்டர், ரோவர் என விண்கலனை நிலவுக்கு அனுப்பி சோதனை செய்யும் திட்டத்துடன் இந்த லட்சியத் திட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அமெரிக்கா அர்ட்டெமிஸ் திட்டத்தில் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அர்ட்டெமிஸ் 1,2 ஆளில்லா விண்கலம் அனுப்பும் திட்டத்தை நாசா வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.
இந்தியா சந்திராயான்-3 திட்டத்தில் நிலவின் தென்துருவத்திற்கு விண்கலன் அனுப்பி வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவும் நிலவுத் திட்டத்திற்கு தயாராகி வருகிறது.
நிலவு பயணம் அவ்வளவு எளிதானது அல்ல. கடந்தாண்டு ஜப்பான், ரஷ்யா விண்கலன்கள் நிலவு சுற்றுப்பாதையை நெருங்கி பின்னர் திட்டம் தோல்வியடைந்தது. எனவே வெற்றிகரமான நிலவு பயணத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சீனா 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது என அந்நாட்டு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. சீன அரசு தொலைக்காட்சியான சி.சி.டி.வி வியாழக்கிழமை கூறுகையில்,
2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவில் முதல் சீனரை நிலைநிறுத்த சீனா இலக்கு வைத்துள்ளது என்று கூறியது.
மேலும், இந்த ஆண்டு சீனா தனது விண்வெளி நிலையத்தின் பயன்பாடு மற்றும் மேம்பாடு மற்றும் மனிதர்களை ஏற்றிச் செல்லும் சந்திர ஆய்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஊக்குவிக்கும் என்று சீனாவின் மனித விண்வெளி ஏஜென்சியை மேற்கோள் காட்டி மாநில ஊடகம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“