Advertisment

இதுவரை யாரும் செய்தது இல்லை.. நிலவின் தொலை தூரத்தில் விண்கலனை தரையிறக்கிய சீனா

இதுவரை யாரும் ஆய்வு செய்யாத நிலவின் தொலை தூரத்தில் விண்கலனை வெற்றிகரமாக தரையிறக்கி சீனா வரலாற்று சாதனை செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
China Moon.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நிலவில் இதுவரை யாரும் ஆய்வு  செய்யாத தொலை தூரப் பகுதியில் சீனா வெற்றிகரமாக விண்கலனை  தரையிறக்கி  வரலாற்று சாதனை செய்துள்ளதாக சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. Chang'e-6 திட்டத்தின் மூலம் நிலவின்  இருண்ட பகுதியில் இருந்து முதல்முறையாக பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரிப்பதை சீனா நோக்கமாக கொண்டுள்ளது. 

Advertisment

பலவிதமான கருவிகள் மற்றும் அதன் சொந்த லாஞ்சர் பொருத்தப்பட்ட Chang'e-6  விண்கலம், பெய்ஜிங் நேரப்படி காலை 6:23 மணிக்கு (2223 GMT) நிலவின் தென் துருவத்தில் உள்ள ஐட்கன் பேசின் என்ற பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (சிஎன்எஸ்ஏ) தெரிவித்துள்ளது. 

Chang'e-6 விண்கலம் மே 3 அன்று சீனாவின் லாங் மார்ச் 5 ராக்கெட் முலம்  தெற்கு ஹைனான் தீவில் உள்ள வென்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நிலவு சுற்றுப்பாதையில் சுற்றி வந்த விண்கலம் இன்று வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீனா தெரிவித்துள்ளது. 

Chang'e-6 லேண்டர் 2 கிலோ அளவிலான நிலவு பொருட்கள் (மண் மற்றும் பாறை மாதிரிகளை) சேகரித்து பூமிக்கு கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment