சீனாவின் கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக் கோள் ஏவுதல் மையத்தில் இருந்து
லாங் மார்ச் 2எஃப் ராக்கெட் மூலம் குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு சீனா விண்கலத்தை ஏவியுள்ளது.
விண்கலத்தை ஏவினாலும் விண்கலத்தின் திட்டம், திட்டத்தின் பெயர் என எதுவும் வெளியிடப்பட வில்லை.
சீனா நாட்டு ஊடகமான Xinhua இந்த நிகழ்வை பற்றி செய்தி வெளியிட்டது. ஆனால் விண்கலம் ஏவிய நேரம் மற்றும் பிற தொழில்நுட்ப விவரங்களை வெளியிட வில்லை. எனினும் ஸ்பேஸ் நியூல், விண்கலம்
அந்நாட்டு நேரப்படி காலை 10:00 மணியளவில் ஏவப்பட்டதாக கூறியது.
விண்கலம் சீனாவிற்குள் நியமிக்கப்பட்ட தரையிறங்கும் தளத்திற்குத் திரும்புவதற்கு முன் சுற்றுப் பாதையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் சுற்றுப்பாதையின் போது, மீண்டும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களைச் சரிபார்க்கும் பணிகளை மேற்கொள்ளும் மற்றும் விண்வெளி அறிவியல் சோதனைகளைச் செய்யும், அவை விண்வெளியின் அமைதியான பயன்பாட்டை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த மூன்றாவது பணியானது 276 நாட்கள் நீடித்த விண்கலத்தின் இரண்டாவது பயணத்திற்கு பிறகு 7 மாதங்களுக்குப் பிறகு தொடர்கிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது பணிகளுக்கு இடையே உள்ள ஒப்பீட்டளவில் குறுகிய இடைவெளியானது, விண்கலத்தின் மறுபயன்பாட்டில் சீனா ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கார்ப்பரேஷன் (CASC) குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் குறிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“