சீனா டியாங்காங் என்ற பெயரில் தனது சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவியுள்ளது. சீனா சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் போட்டியாக நிறுவி உள்ளது. ஏற்கனவே சுற்றுப்பாதையில் இருக்கும் 3 தொகுதிகளுடன் மேலும் 3 தொகுதிகளைச் சேர்ப்பதன் மூலம் சீனா தனது டியாங்காங் விண்வெளி நிலையத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மாற்றாக இருக்கும் என்று சீனா கூறியுள்ளது.
டியாங்காங்கிற்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்து புதன்கிழமை பாகுவில் நடைபெற்ற 47-வது சர்வதேச விண்வெளி மாநாட்டில் வழங்கப்பட்டதாக ஸ்பேஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. "அதில் டியாங்காங்கிற்கு எதிர்காலத்தில் 180 டன்கள், ஆறு தொகுதிகள் கொண்ட அசெம்பிளியை உருவாக்குவோம்" என்று சீன அகாடமி ஆஃப் ஸ்பேஸ் டெக்னாலஜியின் ஜாங் கியாவோ கூறினார்.
6 தொகுதிகள் கொண்ட விரிவாக்க தொகுதி வரும் ஆண்டுகளில் விண்வெளி நிலையத்திற்கு ஏவப்படும். இந்த மல்டி-ஃபங்க்ஸ்னல் மாட்யூல் கோர் டியான்ஹே தொகுதியின் முன்னோக்கி போர்ட்டில் டாக் செய்யும். இதன் பொருள் முழு அளவிலான தொகுதிகள் பின்னர் Tiangong -ல் சேர்க்கப்படலாம்.
தியாங்காங் விண்வெளி நிலையம்
சீன விண்வெளி நிலையத்தில் மூன்று தொகுதிகள் உள்ளன—தியான்ஹே கோர் தொகுதி (“heavenly river” ) குழு தொகுதி மற்றும் ஆய்வக கேபின் தொகுதிகள் வென்டியன் (“quest for heavens”) மற்றும் மெங்டியன் (“dreaming of heaven”). இது 2022-ன் பிற்பகுதியில் இருந்து செயல்படுகிறது. ஒரு நேரத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் வரை தங்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“