/tamil-ie/media/media_files/uploads/2020/01/mars.jpg)
China to launch its first Mars probe mission
China to launch its first Mars probe mission : அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை கோள்களை அனுப்பி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது சீனாவும் தங்களுடைய செயற்கை கோளை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால் அதில் ஒரே ஒரு மாற்றம். இந்த செயற்கைக் கோள் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளது.
வருகின்ற ஜூலை மாதத்தில் இந்த செயற்கைக் கோளை (ரோவரை) லாங் மார்ச் 5 - Y4 என்ற ராக்கெட் விண்வெளிக்கு எடுத்துச் செல்கிறது. சீன நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான China Aerospace Science and Technology Corporation (CASC) செவ்வாயை கண்காணிக்கும் வகையில் அதன் சுற்றுவட்டப் பாதையில் ஒரு செயற்கை கோளையும், தரையிறங்கி ஆராய்ச்சி செய்ய ஒரு ரோவரையும் அனுப்ப உள்ளதை முதன் முறையாக உறுதி செய்துள்ளது.
இந்த வருடம் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் லாங் மார்ச் 5 - Y4 ராக்கெட்டில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் இதன் எஞ்சினின் பர்ஃபார்மென்ஸ்க்காக சோதனை நடத்தப்பட்டது. சீன விண்வெளித்துறை எதிர் கொள்ளும் சவால்கள் எந்த வகையில் இருக்கும் என்பது தான் தெரியவில்லை. பூமியில் இருப்பதைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு ஈர்ப்பு விசை தான் செவ்வாயில் இருக்கும். இதனால் சாஃப்ட் லேண்டிங் ஒரு சவாலான காரியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.