சீன அரசு ஆதரவு பெற்ற நிறுவனம் 2028-க்குள் விண்வெளி சுற்றுலா விமானங்களை தொடங்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன வணிக விண்வெளி நிறுவனமான சி.ஏ.எஸ் ஸ்பேஸ் தனது "விண்வெளி சுற்றுலா வாகனம்" முதலில் 2027 இல் பறக்கும் என்றும் 2028 ஆம் ஆண்டில் விண்வெளியின் விளிம்பிற்கு சென்று திரும்பும் என்றும் அறிவித்துள்ளது.
ஜெஃப் பெஸோஸ்க்கு சொந்தமான ப்ளூ ஆரிஜின் நிறுவனம் விண்வெளியில் குறுகிய தூரத்திற்கு மனிதர்களை அழைத்து கொண்டு சுற்றுலா செல்ல உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் விண்வெளி சுற்றுலாவைத் தொடங்க உள்ளது. ஜெஃப்பின் அறிவிப்புக்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
சி.ஏ.எஸ் ஸ்பேஸ் தனது வாகனத்தில் நான்கு பனோரமிக் ஜன்னல்கள் கொண்ட ஒரு சுற்றுலா அறை இருக்கும் என்றும், ஒரு விமானத்தில் ஏழு பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்றும் கூறியது. புதிதாக கட்டப்பட்ட ஏரோஸ்பேஸ் தீம் பூங்காவில் இருந்து ஒவ்வொரு 100 மணி நேரத்திற்கும் ஒரு வெளியீட்டை ஏற்பாடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது, ஷிப்ட்களில் சுற்றுலாப் பயணிகளை விண்வெளியின் விளிம்பிற்கு அழைத்துச் செல்ல பத்து வாகனங்கள் உள்ளன என்றும் கூறியுள்ளது.
ஒரு பயணத்திற்கு ஒரு நபருக்கு 2 மில்லியன் முதல் 3 மில்லியன் யுவான் ($415,127) வரை இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“