/tamil-ie/media/media_files/uploads/2022/11/China-space-station-20221101.webp)
சீனாவின் லேண்ட்ஸ்பேஸ் டெக்னாலஜி அதன் புதுமையான மீத்தேன் மற்றும் திரவ ஆக்ஸிஜன் மூலம் இயங்கும் ராக்கெட், ஜுக்-2 (Zhuque-2) பயன்படுத்தி ஒரு முக்கிய செயற்கைக்கோள் ஏவுவதற்கு தயாராகி வருகிறது.
குறைந்த விலை, நிலைத் தன்மையை உறுதி செய்ய இந்த ராக்கெட் ஏவுதல் ஒரு முக்கிய வணிக சோதனையைக் காண்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.ஜுக்-2 கேரியர் ராக்கெட் சமீபத்தில் கோபி பாலைவனத்தின் பரந்த பரப்பில் உள்ள ஏவுதளத்திற்கு மாற்றப்பட்டதிலிருந்து இந்த ஏவுதலுக்கான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. Y-3 என பெயரிடப்பட்ட திட்டம் ராக்கெட்டின் திறன்களை சரிபார்க்கும் நோக்கில் சோதனை ஏவுதலின் ஒரு பகுதியாகும்.
இன்னர் மங்கோலியாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக் கோள் ஏவுதல் மையத்தில் உள்ள வெளியீட்டு சாளரம் பற்றி நிறுவனம் வாய் திறக்கவில்லை என்றாலும், தொழில்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
லேண்ட் ஸ்பேஸ்-ன் நிறுவனம் மூன்று சோதனை ஏவுதல்களை இதற்காக திட்டமிட்டுள்ளது, ஏற்கனவே Y-1 மற்றும் Y-2 ஏவுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது Y-3 சோதனை ஏவுதல் செய்யப்படுகிறது. உலகின் முதல் மீத்தேன்-திரவ ஆக்சிஜன் ராக்கெட் ஏவப்பட்டதாக ஒரு வரலாற்று சாதனையை செய்தது. ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ப்ளூ ஆரிஜின் போன்ற உலகளாவிய போட்டியாளர்களை விட சீனாவின் இந்த தொழில்நுட்பம் முன்னணியில் உள்ளது.
இருப்பினும், Y-1 சோதனை கடந்த ஆண்டு சவால்களை எதிர்கொண்டது, அதன் விவரங்கள் நிறுவனத்தால் முழுமையாக வெளியிடப்படவில்லை. லேண்ட் ஸ்பேஸ் அதன் செயல்பாடுகளை அதிகரிக்க லட்சியத் திட்டங்களைக் கொண்டுள்ளது. Zhuque-2 இன் வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, நிறுவனம் 2024 இல் தோராயமாக மூன்று ஏவுகணைகளை ஏவ உத்தேசித்துள்ளது, 2025 ஆம் ஆண்டளவில் அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.