இதுவரை யாரும் ஆய்வு செல்லாத நிலவின் தொலை தூரப் பகுதியில் விண்கலனை தரையிறக்கிய சீனா முதல் முறையாக அங்குள்ள பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து வெற்றிகரமாக பூமி திரும்பி உள்ளது. சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் 2.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான எரிமலை பாறை மற்றும் பிற பொருட்கள் இருக்கும் என்று சீன விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
சீனாவின் Chang'e 6 விண்கலம் செவ்வாயன்று பூமிக்கு திரும்பியது. நிலவின் தொலைதூரப் பகுதியில் இருந்து உலகில் முதல் முதலாக பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து கொண்டு வந்துள்ளது. இந்த ஆய்வு விண்கலம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வடக்கு சீனாவில் உள் மங்கோலியன் பகுதியில் தரையிறங்கியது.
சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் 2.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான எரிமலை பாறை மற்றும் பிற பொருட்கள் இருக்கும் என்று சீன விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். இந்த மாதிரிகள் நிலவின் இரு பக்கங்களிலும் உள்ள புவியியல் வேறுபாடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் என்று நம்புகின்றனர்.
நிலவின் நியர் சைட் (moon’s near side) பகுதிகளில் அமெரிக்கா, சோவியட் யூனியர் ஆகியவை மண் மாதிரிகள் சேகரித்த நிலையில் நிலவின் தொலைதூரப் பகுதியில் (far side) ஆய்வு செய்வது இதுவே முதல் முறையாகும். நியர் சைட் என்பது பூமியிலிருந்து பார்க்கப்படும் நிலவு பகுதியாகும். far side-
தொலைதூரப் பகுதி என்பது விண்வெளி பகுதியாக உள்ளது.
தொலைதூரப் பகுதியில் மலைகள் மற்றும் தாக்க பள்ளங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. Chang'e-6 விண்கலம் மே 3 அன்று சீனாவின் லாங் மார்ச் 5 ராக்கெட் முலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்கலம் 53 நாட்கள் பயணம் மேற்கொண்டது. இலக்கை அடைந்த விண்கலம் நிலவில் துளையிட்டு மண்மாதிரிகளை சேகரித்தது கொண்டு வந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“