chingari, chingari App, chingari App Download, singari app download, singari app, சிங்காரி ஆப், சிங்காரி ஆப் டவுன்லோடிங்
Chingari App Tamil News: ஒரு இந்திய சமூக ஆப்பான Chingari ஒரு லட்சம் பயனர்களை கடந்து விட்டது ! பெங்களூருவை சேர்ந்த இரண்டு புரோகிராமர்களால் 2019 ல் Chingari உருவாக்கப்பட்டது. இந்த ஆப் டிக்டாக்குக்கான உள்நாட்டு மாற்றாக களம் இறக்கப்பட்டது. WhatsApp status களுக்கு படைப்புதிறனுடன் கூடிய வீடியோ மற்றும் ஆடியோ கிளிப்களை உருவாக்கும் விதமாக இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
பயனர்கள் வீடியோக்களை பதிவிரக்கம் செய்யவும் பதிவேற்றம் செய்யவும், நண்பர்களுடன் உரையாடவும், புதிய நபர்களை சந்திக்கவும் அவர்களுடன் தொடர்பு கொள்ளவும், பிற பயனர்களுடன் உள்ளடக்கத்தை பகிர்ந்துக் கொள்ளவும், மற்றும் பயனர்களின் உள்ளீட்டின் அடிப்படையில் பிரவுஸ் செய்யவும் இந்த ஆப் அனுமதிப்பதாக நிறுவனத்தின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
Advertisment
Advertisements
பயனர்கள் வாட்ஸ்அப்பில் Chingari ஆப்பை பயன்படுத்தி ஆடியோ கிளிப், வீடியோ கிளிப், புகைப்படங்கள் மற்றும் GIF sticker களை படைப்புத்திறனுடன் கூடியதாக தங்கள் status ஆக வைக்க முடியும். உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த ஆப், ஹெந்தி, ஆங்கிலம், தெலுகு, தமிழ், பஞ்சாபி, மலையாளாம், மராத்தி, கன்னடம், வங்காளம் மற்றும் குஜராத்தி மொழிகளை ஆதரிக்கும்.
இந்த ஆப் முழுவையாக நமது நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் எந்த வெளிநாட்டு ஆப்களின் நகல் போலவும் இல்லை என்றும் ஒரு பிடிஐ செய்தி தெரிவிக்கிறது. இந்திய பயனர்களின் தேவையை மனதில் வைத்து இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.
இந்திய பார்வையாளர்களிடேயே மிகவும் பிரபலமாகிவிட்ட சீனத்து ஆப்பான டிக்டாக் மற்றும் Chingari ஆப்புக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கும் வகையிலான நிறுவனத்தின் அறிக்கையை பிடிஐ செய்தி மேற்கோள்காட்டியுள்ளது. அந்த அறிக்கையின்படி உள்ளடக்கத்தை உருவாக்கியவரின் வீடியோ எவ்வளவு வைரலாகிறது என்பதை பொருத்து Chingari தனது பயனர்களுக்கு பணம் கொடுக்கும். ஒரு பயனர் இந்த ஆப்பில் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு வீடியோவுக்கும் அந்த வீடியோவின் உள்ளடக்கத்தை உருவாக்கியவருக்கு ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு புள்ளி அளிக்கப்படும். மேலும் இந்த புள்ளிகளை பணமாக திரும்பபெற்றுக் கொள்ளலாம். வீடியோக்களுக்கு பயனர்களின் புகழை பெறும் டிக்டோக் போலல்லாமல் Chingari பயனருக்கு அங்கீகாரத்துடன் பணம் செலுத்துகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil