Christmas 2020 Track Tamil News : இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியின் காலம். ஆனால், இந்த ஆண்டு கோவிட் -19-ன் பரவல் மற்றும் சமூக இடைவெளி புதிய விதிமுறையாக இருப்பதால், திருவிழாக்கள் ஒரே மாதிரியாக இருக்காது. அதிர்ஷ்டவசமாக, வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளை (North American Aerospace Defence Command (NORAD)) மற்றும் கூகுள் சில காலமாக சாண்டாவைக் கண்காணித்து வருகின்றன. பாரம்பரியத்தைத் தொடர்ந்து, நொராடின் வலைத்தளம் இந்த ஆண்டையும் சாந்தாவைக் கண்காணிக்கத் தயாராக உள்ளது. நொராட் செய்தித் தொடர்பாளர் பிரஸ்டன் ஸ்க்லாச்ச்டர், "நாங்கள் எல்லோருக்கும் ஒரு வேடிக்கையான அனுபவத்தை வழங்க விரும்புகிறோம். மேலும் 2020 எப்படியிருந்தது என்பதை அவர்களின் மனதில் இருந்து விலக்கிக் கொள்ளலாம்" என்று கூறினார்.
ஒரு குழந்தை தற்செயலாக கான்டினென்டல் ஏர் டிஃபென்ஸ் (CONAD) செயல்பாட்டு மையத்தின் பட்டியலிடப்படாத தொலைபேசி எண்ணை ஒரு செய்தித்தாள் விளம்பரத்தில் பார்த்தவுடன் அழைத்ததை அடுத்து, குழந்தைகள் சாண்ட்டாவை அழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டது. அப்போதிலிருந்து 1955-ம் ஆண்டு முதல் சாண்டாவைக் கண்காணிக்க நொராட் தொடங்கியது. 65 ஆண்டுகளாக நொராட் டிராக் சாண்டா இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான குழந்தைகளுக்குக் கிறிஸ்துமஸ் மாலையன்று சாண்டாவின் இருப்பிடத்தை நொராட் குறிப்பிடுகிறது.
இந்த தளம் ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானியம், போர்த்துகீசியம் மற்றும் சீன மொழிகளை உள்ளடக்கிய எட்டு மொழிகளில் உள்ளது. மேலும், அதன் புதிய, சாண்டா-கண்காணிப்பு பயன்பாடு மற்றும் சமூக ஊடக சேனல்களை மாலை முழுவதும் புதுப்பிப்புகளை போஸ்ட் செய்யப் பயன்படுத்தும். கிறிஸ்மஸைக் கொண்டாடுவதற்காக விளையாட்டு, விடுமுறை இசை, திரைப்படங்கள் மற்றும் பலவற்றை இந்த வலைத்தளம் கொண்டுள்ளது.
போலார் பிலஞ் (Polar Plunge), ஹைப்பர் ஹாக்கி மற்றும் ஹாலிடே மார்பிள்ஸ் ஆகியவை இங்கு கிடைக்கக்கூடிய சில விளையாட்டுகளில் அடங்கும். இந்த பக்கத்தில் கிறிஸ்துமஸ் பாடல்களை உள்ளடக்கிய ‘மியூசிக் ஸ்டேஜ்’ பகுதியும் உள்ளது. சாண்டா மற்றும் கிறிஸ்துமஸ் பாரம்பரியம் பற்றி குழந்தைகள் கேட்கவும் படிக்கவும் ஒரு பகுதியையும் இந்த வலைத்தளம் உருவாக்கியுள்ளது. மேலும், தியேட்டர் பிரிவில் சாண்டா மற்றும் நொராட் பற்றிய சிறிய படங்களும் அடங்கும். தளத்தில் ஒரு சாட் பாக்ஸும் உள்ளது. பயனர்கள் தங்கள் கேள்விகளுக்கு அங்கு பதில்களைக் காணலாம்.
கூகுளின் சொந்த சாண்டா கண்காணிப்பு அமைப்பும் நேரலையில் உள்ளது. இது, 2004 முதல் ஒவ்வொரு ஆண்டும் சாண்டாவைக் கண்காணித்து வருகிறது. கூகுள் சாண்டா டிராக்கர் வலைத்தளம் ஒரு வண்ணமயமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் சாண்டா செல்ஃபி, எல்ஃப் ஜெட் பேக் மற்றும் பென்குயின் டாஷ் உள்ளிட்ட பல விளையாட்டுகளையும் கொண்டிருக்கிறது. இந்த வலைத்தளம் குழந்தைகளுக்கான அடிப்படை குறியீட்டு விளையாட்டுகளையும் உள்ளடக்கியுள்ளது.
சாண்டாவை காண கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"