Advertisment

உங்க கூகுள் குரோமை உடனே அப்டேட் செய்யுங்கள்.. எச்சரிக்கை!

கூகுள் குரோம் நிறுவனம் ஏற்கனவே 27 பாதுகாப்பு குறைபாடுகளை நீக்கி சரிசெய்த நிலையில் மேலும் 11 பாதுகாப்பு குறைபாடு அம்சங்கள் காணப்படுவதால், மீண்டும் ஒருமுறை அப்டேட் செய்யும்படி தங்களது பயனர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

author-image
WebDesk
Aug 21, 2022 15:36 IST
New Update
உங்க கூகுள் குரோமை உடனே அப்டேட் செய்யுங்கள்.. எச்சரிக்கை!

கூகுள் குரோம் நிறுவனம் அண்மையில் தனது பிரவுசரை புதுப்பித்தது. Mac,Linux,Windows என மூன்றையும் அப்டேட் செய்து வெளியிட்டது. புதிய Chrome பதிப்பு Mac மற்றும் Linux க்கு 104.0.5112.101 மற்றும் Windows க்கு 104.0.5112.102/101 என்றும் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

தற்போது மேலும் 11 பாதுகாப்பு குறைபாடு அம்சங்கள் காணப்படுவதால், மீண்டும் ஒருமுறை அப்டேட் செய்யும்படி தங்களது பயனர்களை கேட்டுக் கொண்டுள்ளது. இதில் ஒன்று சிக்கலானது, 6 அதி தீவிர தன்மை கொண்டது, 3 நடுத்தர தீவிரம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபற்றிய மேலும் விவரங்களை கூகுள் வெளியிடவில்லை.

ஹேக்கர்கள் இந்த பக்கைப் (bug) பயன்படுத்தி தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்த கூடும் என்பதால், பயனர்கள் தங்கள் குரோம் பிரவுசரை உடனடியாகப் புதுப்பித்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். Mac,Linux,Windows என அனைத்துக்கும் இந்த அப்டேட் கிடைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் குரோம் அப்டேட் செய்வது எப்படி?

பயனர்கள் தங்கள் கூகுள் குரோம் பிரவுசர் சென்று வலப்புறத்தில் உள்ள 3 புள்ளிகளை கிளிக் செய்து Help ஆப்ஷனை கொடுத்து, About Google Chrome சென்று புது அப்டேட் தேடல் என இருப்பதை கொடுத்தால் அப்டேட் தேடி திரை முன் காட்டப்படும். “relaunch” ஆப்ஷன் கொடுத்து இன்ஸ்டால் செய்யலாம். சில விநாடிகளில் இன்ஸ்டால் ஆகிவிடும். பின், அதை ஓபன் செய்து பயன்படுத்தலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment