எப்போதும் கேம்ஸ், பேஸ்புக், ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களா நீங்கள்?

கேமிங், இன்டர்நெட், சோஷியல் மீடியா, ஷாப்பிங், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் மற்றும் ஆபாச தளங்களில் மக்கள் அதிக நேரத்தை செலவிடுவதாக SHUT மருத்துவமனை தெரிவிக்கிறது.

பெங்களூரில் இயங்கிவரும், மன நலம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான தேசிய நிறுவனத்தின் சர்வீஸ் ஃபார் ஹெல்தி யூஸ் ஆஃப் டெக்னாலஜி (Service for Healthy Use of Technology), ஒவ்வொரு 15-20 நிமிடத்துக்கும் ஒரு செல்ஃபி எடுக்கும் மாணவியைக் கண்கானித்தனர்.

அவர் மன நலத்தோடு தொடர்புடைய ’பாடி டிஸ்மார்ஃபிக் டிஸாடர்’ என்ற பிரச்னையில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அவருக்கு சில மருந்துகள் கொடுத்து வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டது.

இரண்டு மாதத்தில் அவரிடம் முன்னேற்றம் காணப்பட்டது. ரிப்போர்ட் பாஸிட்டிவாக வந்ததுடன், கண்ணாடி பார்ப்பது நாளைக்கு 5-6 முறையாகவும், ஃபோன் பயன்பாடு 2-3 மணி நேரமாகவும் குறைந்துள்ளது.

டெக்னாலஜி அடிக்‌ஷன் என்பது தற்போது அதிகமாகிக் கொண்டே வருகிறது. செல்ஃபோன் உள்ளிட்ட விஷயங்களில் இளைஞர்கள் தங்களது நேரத்தை செலவிடுவதுடன், உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்கிறார்கள் என்கிறார் சைக்காலஜி பேராசிரியர் மனோஜ் குமார் சர்மா.

லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மெடிக்கல் பல்கலைக்கழகம் மனநல மருத்துவ துறையை துவங்க திட்டமிட்டிருக்கிறது . “நிறைய பேர் மன நலம் சம்பந்தப் பட்ட பிரச்னைகளில் சிக்கி, எங்களை அணுகுகிறார்கள். அதனால் தான் உடனடியாக இத்துறையை துவங்க முடிவெடுத்தோம். தினமும் குறைந்தது 10 பேராவது கவுன்சிலிங்கிற்கு வருகிறார்கள்” என்கிறார் டாக்டர் பி.கே.தலால். இந்த மருத்துவ துறை அடுத்த மாதம் துவங்கும் எனத் தெரிகிறது.

கேமிங், இன்டர்நெட், சோஷியல் மீடியா, ஷாப்பிங், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் மற்றும் ஆபாச தளங்களில் மக்கள் அதிக நேரத்தை செலவிடுவதாக SHUT மருத்துவமனை தெரிவிக்கிறது. இது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வில் 15-30 வயதுக்குள்ளானவர்கள் தான் மேற்கூறியவற்றை அதிகம் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

18-25 வயதுக்குள்ளானவர்களில் 300 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 17 சதவீதம் பேர் அதிக இன்டர்நெட் பயன்பாட்டாளராக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த 300 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 5.7 சதவீதம் பேர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இதில் 15-50 வயதினர் மட்டும் 5-9 சதவீதம்.

அதிக இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் படிப்பில் / வேலையில் நாட்டம் குறைந்து அவர்களது திறன் பாதிக்கப்படுவதாக கூறும் மருத்துவர்கள், வீட்டில் அனைவரும் மனம் விட்டு பேசிக் கொள்வது, சரிவிகித உணவு, சரியான தூக்கம், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றின் மூலம் பெரும் மாற்றத்தைக் காணலாம் என்கிறார்கள்.

இது போன்ற இன்டர்நெட் சம்பந்தமான பிரச்னைகள் பலவற்றிற்கும் விடை தருகிறது பெங்களூருவின் SHUT மருத்துவமனை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close