/tamil-ie/media/media_files/uploads/2021/11/Ch.jpg)
Clubhouse announced 13 new languages and new app icon Tamil News
Clubhouse announced 13 new languages and new app icon Tamil News
Clubhouse announced 13 new languages and new app icon Tamil News : கிளப்ஹவுஸ் இன்று 13 புதிய மொழிகளைச் சேர்ப்பதாக அறிவித்துள்ளது. அவற்றில், இந்தி, கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு, பிரெஞ்சு, ஜெர்மன், இந்தோனேசியா, ஜப்பானீஸ், கொரியன், இத்தாலியன், போர்த்துகீசியம் (பிரேசிலியன்) மற்றும் ஸ்பானிஷ் ஆகியவை அடங்கும்.
இந்த பல மொழி இணைப்பைத் தொடர்ந்து, இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியருமான அனிருத் தேஷ்முக் கொண்ட புத்தம் புதிய பயன்பாட்டு ஐகானையும் அறிவித்திருக்கிறது.
ஆப் ஸ்டோரில் கிளப்ஹவுஸ் பயன்பாடு அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே, இந்தப் பயன்பாட்டில் மில்லியன் கணக்கான மக்கள் சந்தித்து, நண்பர்களை உருவாக்கி, தங்களின் யோசனைகளைப் பகிர்ந்துகொள்வது, ஹேங்கவுட் செய்வது மற்றும் திருமணம் செய்துகொள்வது வரை பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு நாளும் இதில் பலவிதமான உரையாடல்கள் அதிகரித்து வருகின்றன. ஆங்கிலத்தை மட்டுமே ஆதரிக்கும் இந்த செயலியில் தற்போது 13 மொழிகளில், பல நாடுகளில் உள்ளவர்கள் ஒன்று கூடிச் செய்திருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இந்தோனேஷியன், இத்தாலியன், ஜப்பானியம், கன்னடம், கொரியன், மலையாளம், போர்த்துகீசியம் (பிரேசிலியன்), ஸ்பானிஷ், தமிழ் மற்றும் தெலுங்கு உட்பட பதின்மூன்று புதிய மொழிகளுடன் முதலில் ஆண்ட்ராய்டில் மட்டுமே இது தொடங்கப்பட்டிருக்கிறது. விரைவில் iOS மற்றும் கூடுதல் மொழிகளுக்கான ஆதரவைச் சேர்க்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த மாபெரும் அப்டேட் நிச்சயம் ஒரு புதிய ஐகான் இல்லாமல் சாத்தியமில்லை. அந்த வரிசையில் புதிய ஐகானுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அனிருத் தேஷ்முக்!
இந்தியாவில் பெரும்பாலான இசை ரசிகர்களுக்குப் பிடித்த படைப்பாளிகளில் ஒருவர் அனிருத். நூற்றுக்கணக்கான வெவ்வேறு மொழிகள் பேசப்படும் கிளப்ஹவுஸின் நம்பமுடியாத ஒரு பகுதியாக அவர் இருக்கிறார். மற்றும் அவரது முன்னோடியான Mandiie Martinez, Chingona AF கிளப்பின் நிறுவனர் போலவே, அனிருத்தும் பல திறமைகளைக் கொண்ட பல ஹைபனேட் மனிதர். அனிருத் பாடகர் மட்டுமல்ல, கட்டிடக் கலைஞர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். மும்பையைத் தளமாகக் கொண்ட அனிருத், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிளப்ஹவுஸில் சேர்ந்தார். கிளப்ஹவுஸ் சமூகத்தின் இந்த இசை மூலையை உருவாக்குவதற்கு அனிருத் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதை இனி பார்க்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.