கிளப்ஹவுஸ் செயலியில் புத்தம் புதிய ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் அறிமுகம்

Clubhouse launches new spatial audio feature Tamil News கிளப்ஹவுஸ் இப்போது ஒரு நாளைக்கு 700,000-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது.

Clubhouse launches new spatial audio feature Tamil News
Clubhouse launches new spatial audio feature Tamil News

Clubhouse launches new spatial audio feature Tamil News : வெவ்வேறு திசைகளிலிருந்து குரல்கள் வருவது போல் ஒலிக்க கிளப்ஹவுஸ் ஒரு புதிய ஸ்பேஷியல் ஆடியோ அம்சத்தைச் சேர்த்துள்ளது. 3 டி-ல் மக்களின் குரலை வழங்க உதவுவதற்காக இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கிளப்ஹவுஸ் பயன்பாட்டில் உள்ள ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் முதலில் iOS பயனர்களுக்கும் பின்னர் ஆண்ட்ராய்டுக்கும் கிடைக்கும். கிளப்ஹவுஸில் ஸ்பேஷியல் ஆடியோவை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் ஹெட்ஃபோன்களுடன் சிறப்பாக செயல்படுகிறது.

“ஒரு கிளப்ஹவுஸ் அறையில் எத்தனை பேச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, பயன்பாட்டின் தொழில்நுட்பம் பயனர்களுக்கு ஒரு இடஞ்சார்ந்த நிலைப்பாட்டை வழங்கும். இதனால், கேட்பவர் தங்கள் ஹெட்ஃபோன்களில் அவர்களைச் சுற்றியுள்ள குரல்களைக் கேட்க முடியும்” என்று கிளப்ஹவுஸின் ஸ்ட்ரீமிங் தொழில்நுட்பத்தின் தலைவர் ஜஸ்டின் உபெர்டி கூறினார்.

உதாரணமாக, நகைச்சுவை அறைகளில், கிளப்ஹவுஸின் தொழில்நுட்பம் பிரதான பேச்சாளரைக் கண்டறிந்து அந்த நபரின் குரலை முன்னால் வைக்கும். அதே நேரத்தில் மற்றவர்களின் சிரிப்பொலி கேட்பவரின் இடது மற்றும் வலது பக்கத்திலிருந்து வருவது போல் ஒலிக்கும்.

“இந்த ஸ்பேஷியல் தொழில்நுட்பம் வெவ்வேறு பயனர்கள் பேசும் போது கண்டறிவதை எளிதாக்குகிறது. முன்பு பேச்சாளர்களின் cadence மற்றும் குரல் ஒலிக்கு மக்கள் கவனம் செலுத்த வேண்டியிருந்தது” என்று அவர் மேலும் கூறினார்.

இப்போது வரை, கிளப்ஹவுஸ் ஆண்ட்ராய்டு சாதன பயனர்களுக்கு எப்போது ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் வெளியிடப்படும் என்று குறிப்பிடவில்லை. ஆனால், இந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்து iOS பயனர்களுக்கும் ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் தொடங்கும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. கிளப்ஹவுஸ் இப்போது ஒரு நாளைக்கு 700,000-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது. இது மே மாதத்தில் 300,000 ஆக இருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Clubhouse launches new spatial audio feature tamil news

Next Story
ஒளிரும் கடல்களின் மர்மத்தை அறியும் ஆராய்ச்சி; ஆச்சரியம் அளிக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்oceans, bio luminescence
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com