Clubhouse new feature allow hosts to record conversations for later listening Tamil News : கிளப்ஹவுஸ், புத்தம் புதிய ரீப்ளே அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, ஒரு அமர்வைப் பதிவு செய்ய அதன் தொகுப்பாளர்களை அனுமதிக்கிறது. மேலும், அதை ஒரு கிளப் அல்லது சுயவிவரத்தில் சேமிக்கிறது. இந்தப் புதிய அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் பயனர்களுக்குக் கிடைக்கும். பயனர்கள் ரெக்கார்டிங்கை வெளிப்புறமாகவும் பதிவிறக்கம் செய்து பகிர முடியும்.
இது ட்விட்டர் ஸ்பேஸில் சமீபத்தில் தொடங்கப்பட்ட அம்சத்தைப் போன்றது. ஹோஸ்ட்களை, ஆடியோ சாட் அமர்வை பதிவுசெய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இது அனுமதிக்கும். ரீப்ளே ஒரு விருப்ப அம்சமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் அட்மின்கள் எந்த பொது அறையையும் ஆன் அல்லது ஆஃப் செய்யத் தேர்வு செய்யலாம். ரீப்ளேக்கள் இயக்கப்பட்டால், கிளப்ஹவுஸ் பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் முழு அமர்வையும் மீண்டும் இயக்க முடியும்.
பதிவுசெய்யப்பட்ட அமர்வை பின்னர் கேட்பது, லைவ் அறையின் அதே அனுபவத்தை வழங்கும். PTR, மைக் டேப்ஸ் மற்றும் மேலும் பலவற்றை உள்ளடக்கிய நேரடி அமர்வைப் போலவே பயனர்கள் அறையில் உள்ள இயக்கவியல் மற்றும் ஈடுபாட்டை அனுபவிக்க முடியும்.
பதிவுசெய்யப்பட்ட உரையாடலைப் பார்க்க முடிவெடுக்கும் கேட்போருக்கு அடுத்த ஸ்பீக்கருக்குத் தவிர்ப்பது, இடைநிறுத்துவது போன்ற பல்வேறு விருப்பங்கள் வழங்கப்படும். அவர்களால் 1.5 அல்லது 2x வேகத்தில் அமர்வைக் கேட்க முடியும். கிரியேட்டர்கள் தங்கள் ரீப்ளேக்களை யார் கேட்கிறார்கள் என்பதைப் பார்க்க முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கிளப்ஹவுஸின் புதிய ரீப்ளே அம்சம், பின் செய்யப்பட்ட இணைப்புகளையும் ஆதரிக்கும். இது உரையாடலின் போது வெவ்வேறு தளங்களுடன் சாட் மதிப்பீட்டாளர்களை இணைக்க உதவும் சமீபத்திய அம்சம். இந்த இணைப்புகள் பின்னர் பதிவைக் கேட்பவர்களுக்கும் முழுமையாக ஊடாடும் வகையில் இருக்கும்.
“ரீப்ளேக்களை உருவாக்க நாங்கள் தயார் செய்யும்போது, லைவ் கிளப்ஹவுஸ் அறையின் மாயாஜாலத்தையும் ஆற்றலையும் படம்பிடிக்கும் ஒன்றை உருவாக்க விரும்பினோம். இன்று, iOS மற்றும் Android இரண்டிலும் ரீப்ளேக்களை வெளியிடத் தொடங்குகிறோம். நேரலையில் இருப்பது, பின்னர் அனைவருக்கும் கிடைக்கும்” என்று கிளப்ஹவுஸ் குறிப்பிடுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil