Advertisment

வந்திறங்கிய ராக்கெட், சந்திரயான்3: கோவையில் இந்திய விண்வெளி கண்காட்சி

ஶ்ரீ ஹரிகோட்டா இந்திய விண்வெளி மையம் சதீஷ் தவான் விண்வெளி மையம் இணைந்து கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்திய விண்வெளி கண்காட்சி இன்று (அக்.5) தொடங்கியது.

author-image
WebDesk
New Update
Coimbatore Space Expo is going on for 3 days

கண்காட்சியில் எஸ்.எஸ்.எல்.வி,மற்றும் ஜி.எஸ்.எல்.வி, உள்ளிட்ட 6"க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான ராக்கெட்டுகள் மாதிரிகள் உள்ளன.

Coimbatore Space Expo: உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு கோவையில் தொடங்கிய மூன்று நாள் இந்திய விண்வெளி கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று பார்வையிட்டு வருகின்றனர்.

Advertisment

அக்டோபர் 4ம்தேதி முதல் 10"ஆம்"தேதி வரை உலக விண்வெளி வாரமாக கடைபிடிக்கபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஶ்ரீ ஹரிகோட்டா இந்திய விண்வெளி மையம் சதீஷ் தவான் விண்வெளி மையம் இணைந்து கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்திய விண்வெளி கண்காட்சி இன்று (அக்.5) தொடங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் எஸ்.எஸ்.எல்.வி,மற்றும் ஜி.எஸ்.எல்.வி, உள்ளிட்ட 6"க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான ராக்கெட்டுகள் மாதிரி, சந்திராயன் 3, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் வாழ்க்கை வரலாறு உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த கண்காட்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் கண்காட்சியில் பங்கு கொள்ளும் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி கண்காட்சி குறித்த போட்டிகள், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், விண்வெளி ஆய்வுகள் தொடர்பான சிறப்பு காணொளி காட்சிப்படுத்தப்பட்டது.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Science
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment