Advertisment

உலகில் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பாதிப்பு? கொரோனா புள்ளிவிவரம் அறியும் எளிய முறை

மக்களின் பயத்தைப் போக்க, அவசர நிலையின் தன்மைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வெளிப்படையான, நியாயமான தரவுகள்(டேட்டா) தேவைப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உலகில் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பாதிப்பு? கொரோனா புள்ளிவிவரம் அறியும் எளிய முறை

உலகளவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளன். மக்களின் பயத்தைப் போக்க, அவசர நிலையின் தன்மைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வெளிப்படையான, நியாயமான தரவுகள்(டேட்டா) தேவைப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை, மத்திய சுகாதார அமைச்சகத்தி அதிகாரிகள் காலை/ மாலை செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பை வெளியிடுகின்றனர். மேலும், மாநிலம் வாரியாகவும் தரவுகள் வெளியிடப்படுகின்றது.

Advertisment

மைக்ரோசாப்ட்,  கார்னகி மெலன் (Carnegie Mellon University) பல்கலைக்கழகம், உலக சுகாதார அமைப்பு, கூகுள் போன்ற நிறுவனங்கள் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் லைவ் டாஷ்போர்டுகளை உருவாக்கியுள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கே காணலாம்.

உலக சுகாதார அமைப்பின் சூழ்நிலை டாஷ்போர்டு:  உலக சுகாதார அமைப்பின் இந்த டாஷ்போர்டு கொரோனா வைரஸின் உலகளாவிய  தொற்று  பற்றிய புதுப்பிப்புகளை உடனடியாக வழங்குகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இறப்புகள், உள்ளிட்ட பல தொடர்புடைய தரவுகளையும் தருகிறது. உலக சுகாதார அமைப்பால் நிர்வகிக்கப்படும் இந்த டாஷ்போர்டு மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்

கொவிட் விஸ்வலைசர் (covidvisualizer) : இந்த உலகத்தில் உள்ள  அனைத்து நாடுகளிலும், அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தரவுகளை இங்கே பெறலாம். கார்னகி மெலன் (Carnegie Mellon University) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நவிட் மாமூன், கேப்ரியல் ரஸ்கின் ஆகியோரால் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம்  கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை எளிய வகையில்  மக்களுக்கு காட்சிபடுத்துவதே இதன் நோக்கம்  என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

உலகெங்கிலும் உள்ள நம்பகமான ஆதாரங்களைப் பயன்படுத்தி, பல விசயங்களிலும் நிகழ்நேர புள்ளிவிவரங்களை வழங்கும் வேர்ல்டோமீட்டர் (Worldometre) தளத்தில் இருந்து தரவுகள் எடுக்கப்படுகின்றது.

மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

மைக்ரோசாப்ட் கோவிட் -19 டிராக்கர் : மைக்ரோசாப்ட்டின் bing.com/covid வலைத்தளம் ஒவ்வொரு நாட்டின் கொரோனா வைரஸ் தொற்று புள்ளிவிவரங்களை துல்லியமாக வழங்குகிறது.உலக சுகாதார அமைப்பு (WHO), அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்  (சி.டி.சி), ஐரோப்பியாவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ஈ.சி.டி.சி) போன்ற பல அமைப்புகளிடம் இருந்து தரவுகளை திரட்டி பயனர்களுக்கு எளிமையாக வழங்குகிறது. இதனால், நாம் குறிபட்ட நாட்டை எடுத்துக் கொண்டு பல கோணங்களில் ஆய்வு செய்ய முடிகிறது.

மேலும், விவரங்களுக்கு: healthmap

Google Project baseline

போன்றவற்றை முயற்சி செய்து பார்க்கலாம்.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment