லாக் டவுன் அவசரத்திற்கு அட்டகாச ஆஃபர்: ஜியோ, ஏர்டெல் Fibernet

jio fiber plans: இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளார்கள் அளவில்லா அழைப்புகளையும் பயன்படுத்தலாம்.

By: Updated: May 7, 2020, 09:31:37 AM

Jio fiber price list: கோவிட்-19 பல மில்லியன் பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய வைத்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இணையதள பயன்பாடு வியத்தகு எழுச்சியை கண்டுள்ளது. முன்பைவிட இப்போது மக்கள் ஒருவரை ஒருவர் புதுப்பிக்க இணையத்தை நம்பியுள்ளனர்.

கொரோனா போர்வீரர்களுக்கு கப்பற்படை மரியாதை

உங்களுடைய வேலை சுமூகமாக செல்ல நீங்கள் ஒரு நல்ல இணைய திட்டத்தை வைத்திருக்க வேண்டும். இந்த ஊரடங்கு காலத்தில் நீங்கள் சிறந்த பிராட் பேண்ட் திட்டத்தை தேர்ந்தெடுப்பது குறித்து பார்ப்போம்.

ஏர்டெல் (Airtel)

ஏர்டெல் தற்போது மிகவும் நம்பகமான பிராட்பேண்ட் நெட்வொர்க் வழங்குநர்களில் ஒன்றாகும். ஆனால், இது தற்போது கிடைக்கக்கூடிய சில விலையுயர்ந்த திட்டங்களையும் கொண்டுள்ளது. நீங்கள் அதிக வேகமுடைய திட்டத்துக்காக தேடினால் மாதம் ரூபாய் 3,999/- க்கு கிடைக்க கூடிய 1Gbps வேகம் உள்ள திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த VIP திட்டத்தில் அளவில்லா இணைய வசதி மற்றும் தரைவழி தொலைபேசியில் அளவில்லா அழைப்பு வசதியும் கொண்டு உள்ளது.

JioFiber

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட JioFiber, வாடிக்கையாளர்களுக்கு 6 வெவ்வேறு பிராட் பேண்ட் திட்டங்களை வழங்குகிறது. மாதம் ரூபாய் 3,999/- என்ற அளவில் கிடைக்கும் JioFiber Platinum திட்டத்தில் 1Gbps வேகம் வழங்கப்படுகிறது. ஏர்டெல் போல இது அளவில்லா டேட்டாவை வழங்கவில்லை, 2,500GB. என்ற வரம்பில் டேட்டாவை வழங்குகிறது. மேலும் அளவில்லா அழைப்புகள், டிவி வீடியோ காலிங் மற்றும் zero-latency gaming ம் வழங்குகிறது.

ACT Fibernet

JioFiber மற்றும் Airtel போல ACT Fibernet மிகவும் விலை உயர்ந்தது அல்ல அதே நேரத்தில் 1Gbps வேகத்தில் டேட்டாவையும் இது வழங்கவில்லை. மாதம் ரூபாய் 999/- வழங்கப்படும் ACT Platinum Promo திட்டத்தில் நிறுவனம் 150Mbps வேகத்தில் மாதத்துக்கு 1,000GB டேட்டா வரம்பில் வழங்குகிறது.

Tata Sky broadband

Airtel, JioFiber, அல்லது ACT Fibernet போல Tata Sky broadband மிகவும் பிரபலமானது இல்லை. ரூபாய் 1,100 க்கு வழங்கப்படும் அளவில்லா திட்டத்தில் டாட்டா ஸ்கை டேட்டா பதிவிரக்கும் வேகம் 100Mbps வரை வரும்.

BSNL

Tata Sky மற்றும் ACT Fibernet போல பி எஸ் என் எல் வாடிக்கையாளர்களுக்கு 1Gbps பிராட்பேண் திட்டங்களை வழங்கவில்லை. வாடிக்கையாளர்கள் ரூபாய் 1,999 க்கு வழங்கப்படும் CS55 என்ற திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். மாதத்துக்கு 1.5TB என்ற வரம்பில் 200Mbps டேட்டா பதிவிரக்கும் வேகத்தை இந்த திட்டம் வழங்குகிறது. இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளார்கள் அளவில்லா அழைப்புகளையும் பயன்படுத்தலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus lockdown jio fiber airtel broadband plansact fibernet broadband

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X