21 நாட்கள் தேசிய லாக்டவுன் காரணமாக, பெரும்பாலான இந்தியர்கள் வாட்ஸ்அப், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தங்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதனால், தங்களின் இணைய சர்வர்களின் சுமைகளை சமாளிக்க முடியாமல் நிறுவனங்கள் திணறி வருகின்றன.
Advertisment
இந்நிலையில், ஸ்டேட்டஸ் வீடியோ பதிவேற்றம் நேரத்தை இன்று முதல் வாட்ஸ்அப் நிறுவனம் குறைக்கின்றது. WABetaInfo வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மாற்றம் குறிப்பாக இந்திய பயனர்களுக்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, பயனர்கள் 30 விநாடிகள் வரை வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக பதிவேற்றலாம். தற்போது, இந்த வீடியோ காலளவை 15 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. 15 வினாடிகளுக்கு மேல் இருந்தால், வீடியோவை கட் செய்து பதிவேற்ற வேண்டும்.
WABetaInfo இன் அறிக்கையின்படி, இது கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் வீட்டில் இருக்க தொடங்கிய காலத்திலிருந்து வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்துள்ளது.
பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் முன்னதாக, " கோவிட் -19 நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடுகளில் வாட்ஸ்அப் வழியாக அதிக அளவிலான அழைப்பைக் காண்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.
கடந்த மாதத்தில் மட்டும், வாட்ஸ்அப் ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஸ்டேடஸ் காலளவை குறைப்பதால், இணைய சர்வரின் சுமையைக் குறைக்க முடியும் என்று நம்பப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பயங்கரம் முடியும் வரை இந்த மாற்றம் நடைமுறையில் இருக்கும் என்றும் WABetaInfo அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil