ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) போர்ட்டலில் எந்தவொரு உறுப்பினரின் தனிப்பட்ட விவரங்களையும் திருத்தும் செயல்முறையை எளிதாக்கியுள்ளது மற்றும் ஊழியர்கள் வேறு நிறுவன வேலைக்கு செல்லும் போது பி.எஃப் கணக்குகளை மாற்றுவதற்கான வழியையும் எளிதாக்கியுள்ளது.
e-KYC கணக்குகளைக் கொண்ட EPF உறுப்பினர்கள் தங்கள் ஆன்லைன் பரிமாற்ற செயல்களை இப்போது ஆதார்- ஓ.டி.பி உடன் நேரடியாக இ.பி.எப்.ஓக்கு எம்பிலாயர் தலையீடு இல்லாமல் நீங்களே மாற்றலாம் என்று கூறிபட்டுள்ளது.
முன்பு, ஊழியர் பணி மாறுதல் ஏற்பட்டால் பிஎஃப் கணக்கை மாற்றுவதற்கான எந்தவொரு ஆன்லைன் கோரிக்கையும் இ.பி.எப்.ஓக்கு சமர்ப்பிக்கும் முன் எம்பிலாயரால் சரிபார்க்கப்பட வேண்டும். இது 2 வாரங்களுக்கு அதிகமான கால அவகாசம் எடுத்தது.
இப்போது, இ.பி.எப்.ஓ போர்ட்டலில் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் திருத்துவது, பி.எஃப் கணக்குகளை மாற்றுவதற்கான வழிகளை எளிதாக்கப்பட்டுள்ளது.
பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற தங்களது தனிப்பட்ட விவரங்களில் உள்ள பொதுவான பிழைகளை, எந்த ஊழியரின் சரிபார்ப்பு அல்லது ஒப்புதல் இல்லாமல், ஊழியர்களே சுயமாகத் திருத்திக் கொள்ளலாம். EPFO, உலகளாவிய கணக்கு எண் (UAN) அக்டோபர் 1, 2017க்குப் பிறகு வழங்கப்பட்டிருந்தால் (ஆதார் உடன் இணைக்கப்பட்டிருந்தால்) இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எந்த ஆவணமும் இல்லாமல் திருத்திக் கொள்ளலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.