யூடியூப்பில் வீடியோக்களை டிரெண்டிங் செய்வது எப்படி? யூடியூப் அல்காரிதம் சீக்ரெட் என்ன?

யூடியூப் வீடியோக்களுக்கு அதிகப் பார்வைகளைப் பெற, உங்கள் வீடியோவின் கண்டெண்ட் தனித்துவமாகவும், பயனுள்ளதாகவும் இருப்பது அவசியம். அதேபோல, பார்வையாளர்கள் அதிகமாக ஆன்லைனில் இருக்கும் சரியான நேரத்தில் வீடியோவை பதிவேற்ற வேண்டும்.

யூடியூப் வீடியோக்களுக்கு அதிகப் பார்வைகளைப் பெற, உங்கள் வீடியோவின் கண்டெண்ட் தனித்துவமாகவும், பயனுள்ளதாகவும் இருப்பது அவசியம். அதேபோல, பார்வையாளர்கள் அதிகமாக ஆன்லைனில் இருக்கும் சரியான நேரத்தில் வீடியோவை பதிவேற்ற வேண்டும்.

author-image
Meenakshi Sundaram S
New Update
youtube viral

யூடியூப்பில் வீடியோக்களை டிரெண்டிங் செய்வது எப்படி? யூடியூப் அல்காரிதத்தின் ரகசியங்கள் என்ன?

இப்போது எங்கு பார்த்தாலும் யூடியூப் வீடியோதான். பொழுதுபோக்குக்காக ஆரம்பித்த இந்த தளம், இன்று பலருக்கும் ஒரு தொழிலாகவே மாறி விட்டது. ஆசிரியர்கள், சமையல் கலைஞர்கள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள் எனப் பலரும் யூடியூப் சேனல் தொடங்கி தங்கள் திறமைகளை உலகிற்கு காட்டுகின்றனர். ஆனால், எல்லோருடைய வீடியோக்களும் அதிக பார்வைகளைப் பெறுவதில்லை. உங்கள் வீடியோவை வைரலாக்க சில ரகசியங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

1. வித்தியாசமான யோசனைகள்:

Advertisment

உங்கள் வீடியோ வெற்றிபெற, அது தனித்துவமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். ஒரு விஷயம் ஏற்கெனவே பல வீடியோக்களில் சொல்லப்பட்டிருந்தாலும், நீங்கள் அதை புதிய கோணத்தில், சுவாரசியமாக சொன்னால், மக்கள் அதைப் பார்ப்பார்கள். உதாரணத்திற்கு, ஒரு சமையல் குறிப்பை சாதாரணமாய் சொல்வதற்குப் பதிலாக, அதை ஒரு கதையாகச் சொல்லலாம்.

2. சரியான நேரத்தில் பதிவிடுங்கள்:

யூடியூபில் வீடியோ பதிவிடும் நேரம் மிகவும் முக்கியம். குறிப்பிட்ட ட்ரெண்டிங் தலைப்பில் வீடியோ செய்கிறீர்கள் என்றால், மற்றவர்களைவிட நீங்கள் வேகமாக இருக்க வேண்டும். அதேபோல, உங்கள் பார்வையாளர்கள் எப்போது அதிகமாக ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து, அந்த நேரத்தில் வீடியோவை பதிவிட்டால், அது உடனடியாக பலரையும் சென்றடையும்.

3. தரம் முக்கியம்:

அவசரத்தில் வீடியோவின் தரத்தைக் குறைத்துவிடாதீர்கள். வீடியோவின் காட்சித் தரம், ஒலித் தரம் என அனைத்திலும் கவனம் செலுத்துங்கள். தரமான வீடியோக்கள் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும். நீங்கள் வேறு மொழி பார்வையாளர்களை ஈர்க்க விரும்பினால், சப்டைட்டில்களைச் சேர்ப்பது மிகவும் உதவியாக இருக்கும்.

4. உங்கள் ரசிகர்களுடன் பேசுங்கள்

Advertisment
Advertisements

உங்கள் வீடியோக்களைப் பார்ப்பவர்களுடன் உரையாடுவது மிக முக்கியம். கமெண்ட்ஸ் பகுதியில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளியுங்கள். உங்கள் அடுத்த வீடியோவில் எதைப் பற்றிப் பேச வேண்டும் என அவர்களிடமே கருத்து கேட்கலாம். இது பார்வையாளர்களை உங்கள் சேனலுடன் நெருக்கமாக்கி, அவர்களை உங்கள் நிரந்தர ரசிகர்களாக மாற்றும். இந்த எளிமையான 4 டிப்ஸ் பின்பற்றினால், உங்கள் யூடியூப் வீடியோக்களும் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று, நிச்சயம் வைரலாகும்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: