உலகக் கோப்பை கிரிக்கெட் பார்க்க ஏர்டெல்லின் சிறந்த டேட்டா பேக்குகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்கி உள்ள நிலையில் மொபைல் போன்களில் ஏராளமானவர்கள் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் கிரிக்கெட் சீசனுக்கு ஏற்ற ஏர்டெல்லின் டேட்டா பேக்குகள் குறித்து இங்கு பார்ப்போம்.

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்கி உள்ள நிலையில் மொபைல் போன்களில் ஏராளமானவர்கள் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் கிரிக்கெட் சீசனுக்கு ஏற்ற ஏர்டெல்லின் டேட்டா பேக்குகள் குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Airtel

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்கி உள்ளது. ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பலரும் மொபைல் போன்களில் மூழ்கி உள்ளனர். டிஸ்னி+ஹாட்ஸ்டார் இலவசமாக கிரிக்கெட் ஸ்ட்ரீம் செய்தாலும் டேட்டா பேக் சட்டென கரைந்து விடுகிறது. அந்த வகையில் ஏர்டெல் குறைந்த விலையில் Add on ஆக எக்ஸ்ட்ரா டேட்டா பேக்குகள் வழங்குகிறது.

Advertisment

ஏர்டெல் ரூ.49 டேட்டா பேக்

ஏர்டெல் 49 ரூபாய் டேட்டா பேக் 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் 1 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதன் மூலம் ஒரு ஜிபி விலை சுமார் ரூ.8 ஆக இருக்கும். நீங்கள் பயணம் செய்தால் அல்லது ஒரு நாள் வைஃபை இல்லாத பகுதியில் இருந்தால், இந்த டேட்டா பேக் பயனுள்ளதாக இருக்கும். 

ரூ.99 டேட்டா பேக்

Advertisment
Advertisements

ஏர்டெல்லில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 99 அன்லிமிடெட் டேட்டா பேக் 2 நாள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் டேட்டா வழங்குகிறது. ஒரு நாளைக்கு 20ஜிபி என்ற வகையில் 2 நாட்களுக்கு 40ஜிபி டேட்டா வழங்குகிறது. 

ரூ.181 டேட்டா பேக்

இந்த பேக் 30 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. அதாவது இந்த திட்டம் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதிக நாட்கள் வேலிடிட்டி டேட்டா பேக் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் இந்த பேக்கை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். 

அதேபோல் ரூ.301 விலை உயர்ந்த வேலிடிட்டி திட்டம் மொத்தம் 50ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் உங்கள் அன்லிமிடெட் திட்ட வேலிடிட்டி முடியும் வரை பயன்படுத்தலாம்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Airtel

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: