கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை உலகளவிலும், இந்திய அளவிலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் இந்த வேளையில், சைபர் குற்றவாளிகள் இடைவிடாத தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்களை பீதியடைய செய்கின்றனர்.
Advertisment
தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்பான Kaspersky, Covid-19 தொடர்பான புதிய தாக்குதல் கருவிகளை malicious threat actors பயன்படுத்துவதை கண்டறிந்துள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான ஆவணங்கள் என்ற பெயரில் மாறுவேடத்தில் தீங்கிழைக்கும் PDF, MP4 மற்றும் DOCX கோப்புகள் குறித்து இது மக்களை எச்சரிக்கிறது. அதிகப்படியான பணியாளர்கள் தொலை தூரத்திலிருந்து பணிசெய்வதால், Kaspersky நிறுவனங்களை தங்களது cybersecurity ஐ இன்னும் மேம்படுத்த சொல்கிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
Advertisment
Advertisements
சமீப வாரங்களில் Kaspersky’ன் நிபுணர்கள் தனிநபர்களுக்கு இந்த வைரஸ் தொடர்பாக phishing மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர். அதை மேலும் நம்பும்படியாக செய்ய அமெரிக்காவில் உள்ள ஒரு உண்மையான அமைப்பான Centre for Disease Control and Prevention’ஐ கொரோனா தொடர்பான பரிந்துரைகளை சுமந்து வரும் போலி மின்னஞ்சல்களுக்கு மூல ஆதாரமாக கொண்டு இணையதள குற்றவாளிகள் அனுப்பியுள்ளனர். cdc-gov.org எனற நம்பவைக்கும் domain ஐ சொடுக்கும் வரை இந்த வகை மின்னஞ்சல்கள் முறையானதாக தெரியும் ஆனால் அடுத்து வரும் பக்கங்கள் phishing பக்கங்களாக உங்கள் மின்னஞ்சல் தொடர்பான தகவல்களை திருடும் பக்கங்களாக அமைந்துவிடும்.
கொரோனா வைரஸ் தொடர்பாக நம்பதகுந்த தகவல்களை வழங்கிவரும் உலக சுகாதார அமைப்பின் (World Health Organisation) முக்கியமான பங்கை இணையதள குற்றவாளிகள் மூலதனமாக்கிக் கொண்டு எவ்வாறு அதை மோசடிகளுக்கு பயன்படுத்துகின்றனர் என்பதற்கு சமீபத்திய உதாரணம். பயனர்களுக்கு உலக சுகாதார அமைப்பிரம் இருந்து வந்ததாக கூறி ஒரு மின்னஞ்சல் வரும், அது கொரோனா வராமல் இருக்க நாம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான தகவல்களை வழங்குவதாக இருக்கும். அந்த மின்னஞ்சலோடு உள்ள இணைப்பை பயனர் சொடுக்கிய உடன் அது அவர்களை phishing இணையதளத்துக்கு எடுத்து சென்று அவர்களை தங்களது தனிப்பட்ட தகவல்களை பகிரச் சொல்லும். அது உடனடியாக இணையதள் குற்றவாளிகளின் கைகளில் சென்று சேரும். மீண்டும் சில தீங்கிழைக்கும் கோப்புகளும் மின்னஞ்சல் வழியாக பரவும்.
ஒரு புறம் கொரோனா வைரஸுக்கு எதிரான ஒரு மருந்தை கண்டுபிடிக்க மருத்துவ நிபுணர்கள் விரைந்துக் கொண்டிருக்கும் வேளையில், மறுபக்கம் இணையதள குற்றவாளிகள் அதே வேகத்தில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தந்திரங்களை பயன்படுத்தி இந்த தொற்று நோயால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதியை பயன்படுத்தி, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பணத்தை சுருட்ட முயற்சி செய்து வருகின்றனர். எனவே நாங்கள் மக்கள் அனைவரையும் மிகவும் அமைதியாக அதே நேரம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம், என Kaspersky நிறுவனத்தின், managing director for Asia Pacific Stephan Neumeier கூறியுள்ளார்.
APAC ல், Kaspersky கொரோனா வைரஸ் தொடர்புடைய 93 malware களை வங்காளதேசத்திலும், பிலிப்பைன்ஸில் 53, சீனாவில் 40, வியட்நாமில் 23, இந்தியாவில் 22, மலேசியாவில் 20 கண்டுபிடித்துள்ளது. இது போக சிங்கப்பூர், ஜப்பான், இந்தோனேசியா, ஹாங்காங், மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஒரு இலக்க எண்ணிக்கையிலான malware களை கண்டுபிடித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil