ஃபீஞ்சல் புயல் இதுவரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறதது. மாவட்ட நிர்வாகங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக முன்னேறி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. இது ஃபீஞ்சல் புயலாக உருவாகும் என வானிலை மையம் கூறியுள்ள நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. அதானல் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்கள், நாகப்பட்டினம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஃபீஞ்சல் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நவ.30 ஆம் தேதி காலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காற்று, மழை மற்றும் புயல் நிலவரங்கள் பற்றி நிகழ் நேரத்தில் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இந்நிலையில், windy.com என்ற தளம் வரைப்படங்களுடன் புயல் பற்றி விவரங்களை நிகழ் நேரத்தில் கூறுகிறது,
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“