/tamil-ie/media/media_files/uploads/2019/11/d2h.jpg)
D2h New Set-Up Box
D2h New Set-Up Box with 30 Days Free Service: டிஷ் டிவியின் சேட்லைட் டிவி நிறுவனமான டி2எச் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக ”லாயல்ட்டி கி ராயல்டி” (Loyality ki Royality) என்ற சிறப்பு சலுகை ஒன்றை வழங்கி வருகிறது. இந்த சலுகை மூலமாக வாடிக்கையாளர்கள் 30 நாள் வரையில் இலவசமாக டி2எச் சேவையை பெற்றுக் கொள்ளலாம். ஆக்டிவ் மற்றும் இன்னாக்டிவ் யூசர்கள் என இருவருக்குமே பயன் அளிக்கும் வகையில் இந்த ஆஃபர் வழங்கப்பட்டு வருகிறது.
அதிக நாட்களுக்கு பயன் தரும் வகையில் லாங் டெர்ம் ரீசார்ஜ் ப்ளான்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் போது இது போன்ற இலவச சேவையை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் பேக்கைப் பொறுத்து 7 முதல் 30 நாட்களுக்கு இந்த இலவச சேவைகள் கொடுக்கப்படுகிறது.
மூன்று மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை இலவச சேவையை பெற்றுக் கொள்ளலாம். 6 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்தால் 15 நாட்கள் வரை இலவச சேவையை பெற்றுக் கொள்ளலாம். 12 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதம் வரை இலவச சேவையை மக்கள் பெற்றுக் கொள்ள இயலும். ஏர்டெல் டிஜிட்டல் டிவிக்கு சவால் விடும் வகையில் புதிதாக ஹைப்ரிட் செட்-ஆப் பாக்ஸையும் சமீபத்தில் வெளியிட்டது டி.2.எச் நிறுவனம். நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் கண்டெண்ட்டுகளை இந்த சேவை மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க : சிம் கார்டுகளை மாற்ற பி.எஸ்.என்.எல் விதித்துள்ள கட்டணம் என்ன தெரியுமா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.