ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் பயனர்களுக்கு சில ட்ரிக் ஆப்ஷன்களை வழங்குகின்றன. ஏர்டெல் டேட்டா லோன் என்ற வசதியையும், ஜியோ இலவச டேட்டா வவுச்சர் ஆப்ஷனையும் வழங்கி வருகிறது. இது இக்கட்டான நேரத்தில் உங்களுக்கு டேட்டா தேவைப்படும் நேரத்தில் அதேசமயம் ரீசார்ஜ் செய்ய முடியாத பொழுது இதைப் பயன்படுத்தலாம்.
ஜியோவில் இலவச டேட்டா பெறுவது எப்படி?
ஜியோ ப்ரீபெய்டு பயனர்களுக்கு அவசரகால டேட்டா வவுச்சர் வசதியை வழங்கி வந்தது, ஆனால் இது நிறுத்தப்பட்டது. இருப்பினும், மை ஜியோ (MyJio) பயனர்கள், கீழே உள்ள ட்ரிக்கைப் பயன்படுத்தி இலவச டேட்டாவைப் பெறலாம்.
மை ஜியோ ஆப் ஓபன் செய்து Play&Win கிளிக் செய்யவும். இதையடுத்து ஏதோ ஒரு ஆப்ஷனை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். இதன் பின் நீங்கள் 6 ஜிபி வரை இலவச டேட்டாவை பெற முடியும்.
ஏர்டெல் டேட்டா லோன்
ஜியோவைப் போலல்லாமல், ஏர்டெல் தொடர்ந்து 2ஜி மற்றும் 4ஜி பயனர்களுக்கு டேட்டா லோன்களை வழங்கி வருகிறது. 1 ஜிபி டேட்டா லோன் பெற பயனர் ‘52141’-ஐ அழைக்கலாம் அல்லது ‘*567*3#’ டயல் செய்யலாம். இந்த ஆப்ஷனைப் பெற பயனர் 3 மாதங்களுக்கு நெட்வொர்க்கில் இருந்திருக்க வேண்டும். 1 ஜிபி டேட்டா இரண்டு நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.
புதிய டேட்டா பேக் மூலம் உங்கள் எண்ணை ரீசார்ஜ் செய்யும்போது, அதில் இருந்து 1 ஜிபி டேட்டாவை ஏர்டெல் கழிக்கும். நிலுவையில் உள்ள லோன் தீர்க்கும் முன் உங்களால் மறுபடியும் டேட்டா லோன் பெற முடியாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“