/tamil-ie/media/media_files/uploads/2019/11/skynews-deep-ocean-nekton_4554984.jpg)
ISRO Deep Ocean Mission - ISRO submersible vehicle
ISRO Deep sea mission: நிலவுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்பிய இஸ்ரோ, கடலுக்கு 6000 அடிக்கு கீழ் செல்வதற்கான வாகனத்தை தற்போது வடிவமைத்துள்ளது. மனிதர்கள் செல்லும் நீர்மூழ்கி கோளத்தின் வடிவமைப்பை வெற்றிகரமாக இஸ்ரோ செய்துவிட்டதாககவும், சான்றிதழ் பெற்றவுடன் செயல்பாட்டுக்கு வரத் தயாராகும் என்று பூமி அறிவியல் துறை அமைச்சகத்தின் செயலாளர் மாதவன் நாயர் ராஜீவன் கூறியுள்ளார்.
தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியின் போது, பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த மூத்த அதிகாரி, " நீர்மூழ்கி கோளம் மிகவும் நுட்பமான தொழிற்நுட்பத்தால் (டைட்டானியம்) செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
"இஸ்ரோவால் வடிவமைக்கப் பட்ட இந்த நீர்மூழ்கி கோளம் வாகனம் சான்றிதழ் பெறுவதற்காக சர்வதேச நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது , மனிதர்களைக் கடலின் ஆழத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியை அடுத்தக் கட்டமாக தயாராகுவோம் " என்று தெரிவித்தார்.
2022 ம் ஆண்டில் இது பயன்பாட்டிற்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் நீர்மூழ்கி வாகனம் மூலம் கடல் அடியில் மனிதர்களை அனுப்பிய ஆறாவது நாடு என்ற பெருமையையும் இந்தியா அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீர்மூழ்கி கப்பலால் அதிகபட்சம் கடலுக்கு அடியில் 200 அடி வரை பயணிக்க முடியும். ஆனால், இஸ்ரோ தற்போது கண்டுபிடித்துள்ள கோளம் வடிவிலான நீர்மூழ்கி வாகனத்தை வைத்து 6000 அடி வரை பயணிக்கலாம் என்று தெரிகிறது.
கடலுக்கு அடியில் புதைந்துள்ள பல தரப்பட்ட உயிர்கள், கனிம வளங்கள் போன்றவைகள் வரை மிகப் பெரிய அளவில் சோதிக்கப்படமாலே இருக்கின்றன. இஸ்ரோவின் இந்த முயற்சி பல கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.