இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வங்கி வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு மற்றும் பின் இல்லாமல் வங்கி ஏடிஎம்களில் பணத்தை டெபாசிட் செய்யும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெபிட் கார்டு இல்லாமல் யு.பி.ஐ மூலம் ஏ.டி.எம்-ல் பணம் டெபாசிட் செய்யும் வசதி ஆகும். ஆர்.பி.ஐ துணை ஆளுநர் ரபி சங்கர் அண்மையில் இந்த யு.பி.ஐ- ஐ.சி.டி (UPI interoperable cash deposit) வசதியை அறிமுகம் செய்தார்.
எப்படி பயன்படுத்துவது?
- UPI பரிவர்த்தனைகளை ஆதரிக்கும் ஏ.டி.எம்க்கு செல்லவும்.
2. UPI Cash Deposit என்ற ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.
3. UPI ஆப் மூலம் ஏ.டி.எம் மெஷினில் வரும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
4. இப்போது டெபாசிட் செய்யப்படும் தொகையை உள்ளிடவும்.
5. நீங்கள் கொடுத்த தொகை UPI ஆப்பிலும் காண்பிக்கப்படும்.
6. அடுத்ததாக, UPI-இணைக்கப்பட்ட வங்கி கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
7. இப்போது பணத்தை டெபாசிட் செய்ய யு.பி.ஐ பின் கொடுக்கவும்.
8. இதன் பின் வெற்றிகரமாக பணம் டெபாசிட் செய்யப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“