10 மாத சந்தாவில் 12 மாதங்களுக்கு டிவி சேவைகளை வழங்கும் டிஷ் டிவி, டி2எச்

Dish TV offers : நீண்ட நாள் பேக்கேஜை தேர்வு செய்தவர்களுக்கு சூப்பர் சலுகைகளை வழங்கியுள்ளது இந்நிறுவனங்கள்...

Dish TV offers : நீண்ட நாள் பேக்கேஜை தேர்வு செய்தவர்களுக்கு சூப்பர் சலுகைகளை வழங்கியுள்ளது இந்நிறுவனங்கள்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DTH customers FTA channels connections details

DTH customers FTA channels connections details

Dish TV D2H long term plans double benefits : டிஷ் டீவி மற்றும் டி2எச் சந்தாதாரர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி அறிவித்துள்ளது அந்நிறுவனம். ட்ராய் அமைப்பு புதிய கேபிள் டிவி சட்டத்தினை அறிமுகம் செய்த பிறகு பல்வேறு முக்கிய மாற்றங்களை டிடிஎச் சேவையை வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது.

Advertisment

அதே போன்று தான் தற்போதும், நீண்ட நாள் பேக்கேஜை வாங்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை வழங்கியுள்ளது டிஷ் டிவி மற்றும் டி2எச் சேவைகள்.

டிஷ் டிவி சலுகைகள்

10 மாதங்கள் வரையிலான டிஷ் சேவையை பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் இரண்டு மாத சேவைகளை நீட்டித்து அறிவித்துள்ளது அந்நிறுவனம். மேலும் 6 மாதங்கள் வரையிலான பேக்கேஜை பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு மாதம் சேவையை இலவசமாக நீட்டித்துள்ளது இந்நிறுவனம்.

டி2எச் சேவைகள்

டி2எச் நிறுவனமும் இதே போன்ற சலுகையினை வழங்கியுள்ளது. மூன்று மாத பேக்கேஜைப் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 14 நாட்கள் இலவச தொலைக்காட்சி சேவைகளையும், 6 மாத பேக்கேஜிற்கு ஒரு மாத இலவச சேவைகளையும், 10 மாத பேக்கேஜைப் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 2 மாத இலவச சேவைகளையும் வழங்கியுள்ளது இந்நிறுவனம்.

Advertisment
Advertisements

மேலும் படிக்க :  BSNL Prepaid Plan: பிளானில் அதிரடியாக 100 ரூபாயைக் குறைந்த பி.எஸ்.என்.எல்

Trai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: