/tamil-ie/media/media_files/uploads/2019/02/unnamed.jpg)
Dish TV Festive offer Dish TV Provides 250 channels
Dish TV Festive offer Dish TV Provides 250 channels : டி.டி.எச் மார்க்கெட்டில் என்றும் டிஷ் டிவி மற்றும் டாட்டா ஸ்கைக்குமான போட்டி என்றும் நிலவி வரும் ஒன்று. இந்தியா முழுவதும் அதிகப்படியான வாடிக்கையாளர்களை கொண்ட முக்கிய டி.டி,எச் நிறுவனங்களாக இவ்விரண்டு நிறுவனங்களும் இருந்து வருகிறது. வாடிக்கையாளர்களை தக்க வைப்பதிலும் ஒன்றுக்கொன்று சலிப்பில்லாமல் செயல்பட்டு வரும் நிறுவனங்களாகும். அதற்காக புதிய சலுகைகளையும் அவ்வபோது வழங்கி வருகிறது டிஷ் டிவி. சமீபத்தில் ஹைப்ரிட் செட்டாப் பாக்ஸ் என்று ஓ.டி.டி. சேவைகளையும் டிஷ் சேவையில் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி நேரம் நெருங்கி வருகின்ற நிலையில் சில புதிய சலுகைகளை வழங்க உள்ளது டிஷ் டிவி. 2 வருடங்களுக்கான சந்தாவை ஒரே நேரத்தில் கட்டும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளாது. அதன்படி 24 மாதங்களுக்கான சந்தா மாதம் ரூ. 219 என நிர்ணயித்து ரூ. 5256 என அறிவிக்கப்பட்டுள்ளது.
Family Entertainment HD
ஃபேமிலி எண்டெர்டெய்ன்மெட் எச்.டி. என்ற பேக் இதற்கு முன்பு ரூ. 7, 800க்கு வழங்கப்பட்டது. தற்போது அது ரூ. 7,176க்கு வழங்கப்பட உள்ளது. இனி வாடிக்கையாளர்கள் ரூ. 325க்கு பதிலாக ரூ. 299-ஐ மாத சந்தாவாக கட்டலாம்.
Family English HD channel
ஃபேமிலி இங்கிலீஷ் எச்.டி. என்ற பேக் ரூ. 10,776-க்கு அறிமுகமாகியுள்ளது. இதற்கு மாத சந்தாவாக ரூ. 449 கட்டிக் கொள்ளலாம். ஃபேமிலி கிரிக்கெட் பேக் எஸ்.டி. பேக் ரூ. 6600 (மாத சந்தா ரூ.275). ஃபேமிலி கிரிக்கெட் பேக் எச்.டி. பேக் ரூ. 8,376 (மாத சந்தா ரூ. 349). இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு பேக்கும் 250க்கும் மேற்பட்ட சேனல்களை வழங்கி வருகிறது என்பது தான்.
மேலும் படிக்க : கோபமடைந்த வாடிக்கையாளர்களுக்காக 30 நிமிடம் இலவச டாக் டைம் வழங்கிய ஜியோ
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us