வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ( Disney+ Hotstar) இந்தியாவில் அக்கவுண்ட் ஷேரிங் வரம்பை கட்டுப்படுத்துவதன் மூலம் தனி நபர் சப்ஸ்கிரிப்ஷன், வருவாயை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. சமீபத்தில் நெட்ஃபிலிக்ஸ் பாஸ்வேர்ட் ஷேரிங் அம்சத்திற்கு கட்டுப்பாடு விதித்த நிலையில் டிஸ்னி நிறுவனமும் இதை செய்கிறது.
தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் திட்டத்தில் 10 சாதனங்களில் கனெக்ட் செய்து பயன்படுத்த முடியும். இதை 4 சாதனங்களாக குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் இதை செயல்படுத்த நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. மேலும் உயர் தரத்தில் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வதாகவும் கூறியுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனி நபர் சப்ஸ்கிரிப்ஷனை அதிகரிக்கவும், ஓ.டி.டி நிறுவனங்களின் போட்டி காரணமாக வருவாயை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“