ஸ்மார்ட் டிவிகளுக்கு இப்படி ஒரு தள்ளுபடியா? அமேசான், ஃப்ளிப்கார்ட்டின் அதிரடி தீபாவளி சேல்!

Amazon, Flipkart Diwali Sale 2019 : சியோமி நிறுவனம் குறைந்த விலையில் தரமான டிவிகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

Flipkart Republic Day sale Samsung, Vu, Xiaomi TVs
Flipkart Republic Day sale Samsung, Vu, Xiaomi TVs

Diwali 2019 Amazon, Flipkart Smart TV Sale, offers, and deals : இந்த தீபாவளிக்கு அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு தள்ளுபடிகளை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வந்தது. போன்களுக்கு அடுத்து ஸ்மார்ட் டிவிகளுக்கான டிமாண்ட் மிகவும் அதிகமாக, இவ்விரண்டு நிறுவனங்களும் சிறப்பு தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன.

Samsung 7-in-1 UA32N4305ARXXL/Samsung The Frame

டிவி என்று வரும் போது மிகவும் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஒரு மாடல் இது தான். சாம்சங் நிறுவனத்தால் மிக சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி இது. ரூ. 17,999 விற்பனை செய்யப்பட்ட இந்த டிவி திரை தற்போது ரூ. 14,999 விலையில் ஃப்ளிப்கார்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 720 பிக்சல் ரெசலியூசன் கொண்ட எச்.டி. ரெடி டிஸ்பிளே இது. இதனை நீங்கள் பெர்சனல் கம்ப்யூட்டராகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.  சாம்சங் நிறுவனத்தின் 7-இன் – 1 சீரிஸில் வெளியாகிய மற்றொரு திரை 55 இன்ச் சாம்சங் ஃப்ரேம் ஆகும். இதன் தற்போதைய விலை ரூ. 99,999. இதனுடைய ரெஃப்ரெஷ் ரேட் 120 ஹெர்ட்ஸ். இந்த டிவியை ஆஃப் செய்தால் அது ஒரு ஃபோட்டோ ஃப்ரேம் போல செயல்படுமாம்.

மேலும் படிக்க : ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆல்-இன்-ஒன் ப்ரீபெய்ட் ப்ளான்… நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா!

Vu 40GA (2019 Model)

40 இன்ச் ஃபுல் எச்.டி. தரச்சான்றிதழ் பெற்ற ஆண்ராய்ட் எல்.ஈ.டி திரை து. இதனுடைய உண்மை விலை ரூ. 27 ஆயிரம் ஆகும். தற்போது அமேசானில் இந்த ஸ்மார்ட் டிவி ரூ. 18,499க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எக்ஸ்சேஞ்சில் வாங்கும் நபர்களுக்கு கூடுதலாக ரூ. 7,399 தள்ளுபடியையும் அறிவித்துள்ளது.

Xiaomi Mi TV 4A Pro 32-inch/Mi TV 4X Pro 55-inch

சியோமி நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்டிவிகளை மிகவும் நியாயமான விலைக்கு விற்பனை செய்து வருகிறது. இதன் மிகவும் பிரபலமான டிவியான எம்.ஐ. டிவி 4ஏ ப்ரோவின் விலை ரூ. 10,999 ஆகும். 32 இன்ச் எச்.டி ரெடி திரையை கொண்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் உள்ளிட்ட ஓ.டி.டிக்களை நீங்கள் இந்த டிவியில் கண்டு களிக்கலாம். எக்ஸ்சேஞ்சில் ரூ. 6500 வரை தள்ளுபடி போக நீங்கள் இந்த புதிய டிவியை பெற்றுக் கொள்ளலாம்.

Xiaomi Mi TV 4X Pro – இது ஒரு 55 இன்ச் 4K ரெசலியூசன் கொண்ட எல்.ஈ.டி திரையாகும். இது எச்.டி.ஆர் 10-ஐ சப்போர்ட் செய்கிறது. தள்ளுபடியில் தற்போது இந்த டிவி ரூ. 37,999க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

LG 32LJ573D-TA

எல்.ஜி நிறுவனத்தின் எச்.டி. ரெடி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி தற்போது ஃப்ளிப்கார்டில் ரூ. 14,999க்கு விற்பனையாகி வருகிறது. இதன் பேனல் 720 பிக்சல்களை கொண்டிருக்கிறது. 20 வாட்ஸ் ஸ்பீக்கர் மிகவும் துல்லியமான ஆடியோவை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் வசதிகளுடன் வருகிறது இந்த ஸ்மார்ட் டிவி.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Diwali 2019 amazon flipkart smart tv sale deals offers and more

Next Story
ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆல்-இன்-ஒன் ப்ரீபெய்ட் ப்ளான்… நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா!Reliance Jio All-In-One Prepaid Plans features, Reliance Jio New Prepaid Plans, reliance jio prepaid plans, reliance Jio all in one plan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com