ஜியோ வெப்சைட்டுக்கு போங்க... தீபாவளி பரிசு காத்துட்டு இருக்கு!

இந்த கிஃப்ட் வவுச்சரை பயன்படுத்தி நீங்கள் இந்தியாவில் எந்த ஜியோ ஸ்டோரிலும், ஜியோ போனை பெற்றுக் கொள்ளலாம்.

Diwali 2019 JioPhone gift voucher : இந்த தீபாவளிக்கு உங்களின் உற்ற உறவினர்களுக்கு என்ன அன்பளிப்பு தரலாம் என்று ஆவலுடன் யோசித்துக் கொண்டிருந்தால் இது உங்களுக்காக தான். ஜியோ போனை ஏற்கனவே மிக குறைந்த விலையில் ஆஃபருக்கு வைத்திருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். ஆனால் தற்போது சில ஆட் –  ஆன் பேக்கேஜ்களை இணைத்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.

Diwali 2019 JioPhone gift voucher

நான்கு சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது ஜியோ நிறுவனம். ரூ. 808, ரூ.1006, ரூ. 1,501, மற்றும் ரூ. 1,996-க்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளில் இடம் பெற்றிருக்கும் முக்கியம் அம்சங்கள் என்னென்ன?

ரூ.808 ப்ளானை தேர்வு செய்தால், கஸ்டமர் ஜியோ போனுடன் ஒரு மாத ரீசார்ஜ் சேவையையும், ரூ.10 மதிப்பிலான IUC சேவையையும் இலவசமாக பெறலாம்.

ரூ.1006 ப்ளானை தேர்வு செய்தால், கஸ்டமர் ஜியோ போனுடன் மூன்று மாத ரீசார்ஜ் சேவையையும், ரூ.10 மதிப்பிலான IUC சேவையையும் இலவசமாக பெறலாம்.

ரூ.1501 ப்ளானை தேர்வு செய்தால், கஸ்டமர் ஜியோ போனுடன் எட்டு மாத ரீசார்ஜ் சேவையையும், ரூ.10 மதிப்பிலான IUC சேவையையும் இலவசமாக பெறலாம்.

ரூ.1996 ப்ளானை தேர்வு செய்தால், கஸ்டமர் ஜியோ போனுடன் 13 மாத ரீசார்ஜ் சேவையையும், ரூ.10 மதிப்பிலான IUC சேவையையும் இலவசமாக பெறலாம்.

Diwali 2019 JioPhone gift voucher

ஜியோ போனுடன் கூடிய ஜியோ ரீசார்ஜ் கூப்பன்களை ஒருவருக்கு நீங்கள் கிஃப்டாக வழங்க நீங்கள் முதலில் ஜியோ இணையத்திற்கு செல்ல வேண்டும். அதில் கிஃப்ட் ஜியோபோன் என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அதில் கிஃப்ட் நவ் என்ற ஆப்சன் இருக்கும். அதில் உங்கள் போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும். நீங்கள் யாருக்கு அதை அன்பளிப்பாக தர விரும்புகின்றீர்களோ அவர்களின் போன் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் எந்த ப்ளானை தேர்வு செய்கிறீர்கள் என்று கேட்கப்படும். அதில் உங்களுக்கு விருப்பமான ப்ளானை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அது கிஃப்ட் வவுச்சராக அனுப்பி வைக்கப்படும். அதனைக் கொண்டு இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எந்த ஜியோ ஸ்டோரில் வேண்டுமானாலும் ஜியோ போனை பெற்று கொள்ள இயலும்.

மேலும் படிக்க : பி.எஸ்.என்.எல், ஏர்டெல், வோடபோன் மீது பகிரங்க குற்றம் சுமத்தும் ஜியோ… ஏர்டெல் தக்க பதிலடி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close