Happy Diwali 2020 Whatsapp Stickers Tamil News : இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே சோஷியல் டிஸ்டன்சிங்கைப் பின்பற்றி வருகிறோம். அதனால், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம். லாக்டவுன் அதிகாரப்பூர்வமாகத் தளர்த்தப்பட்டாலும், பெரும்பாலோர் இன்னும் வீடுகளுக்குள் முடங்கிதான் இருக்கிறார்கள். தீபாவளி நெருங்குவதால், கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வெளியே வர ஆரம்பித்திருக்கின்றனர். பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளும் நேரம் என்றாலும், கோவிட்-19-ன் தாக்கம் குறைந்தபாடில்லை. அதனால், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வதில் மக்களிடத்தில் தயக்கம் இருக்கிறது. ஆனால், வாட்ஸ்அப் போன்ற சில செயலிகள் மூலம் டிஜிட்டல் வழியாக வாழ்த்துக்களை அனுப்பி, என்றென்றும் அனைவரையும் இணைப்பில் வைத்திருக்க உதவுகின்றன. இணையம் வழியாகப் பரிசுகளையும் ஆர்டர் செய்ய முடியும். அந்த வரிசையில் வாட்ஸ்அப்பில் எப்படி தீபாவளி சிறப்பு ஸ்டிக்கர்களை அனுப்பலாம் என்பதை இனி பார்க்கலாம்.
Diwali 2020 Whatsapp Stickers: வாட்ஸ்அப் தீபாவளி ஸ்டிக்கர்கள்
வாட்ஸ்அப் தனது ஸ்டிக்கர் ஸ்டோரில் பல தீபாவளி அனிமேஷன் ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பலாம். பதிவிறக்கம் செய்து அனுப்பக் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:
* வாட்ஸ்அப் செயலி புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
* இப்போது சாட் பக்கத்தின் உள்ளே இருக்கும் எமோஜி ஐகானைத் க்ளிக் செய்யவும்.
* ஸ்டிக்கர் ஐகானை க்ளிக் செய்த பின்னர் ‘+’ ஐகானை க்ளிக் செய்யவும்.
* நீங்கள் விரும்பும் ஸ்டிக்கர் பேக்கை (Pack) தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்யவும்.
* இந்த புதிய ஸ்டிக்கர்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்த அனுப்பலாம்.
மூன்றாம் தரப்பு வாட்ஸ்அப் தீபாவளி ஸ்டிக்கர்கள்
வாட்ஸ்அப் ஸ்டோரில் உள்ள ஸ்டிக்கர்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், வேறு வகையான ஸ்டிக்கர்களைப் பெறப் பின்வரும் வழிகளைப் பின்பற்றவும்:
* நீங்கள் ஸ்டிக்கர் அனுப்ப விரும்பும் நபரின் வாட்ஸ்அப் சாட்டைத் திறக்கவும்.
* எமோஜி பட்டனை க்ளிக் செய்யவும்.
* அங்குள்ள ஸ்டிக்கர் ஐகானை க்ளிக் செய்தபின், ‘+’ ஐகானை க்ளிக் செய்யவும்.
* பட்டியலின் அடிப்பகுதிக்குச் சென்று “மேலும் ஸ்டிக்கர்களைப் பெறு” விருப்பத்தை க்ளிக் செய்யவும்.
* இது நீங்கள் பதிவிறக்கம் செய்யக்கூடிய ஸ்டிக்கர் பயன்பாடுகளைக் காட்டும் தேடல் முடிவுடன், கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரை திறக்கும்
* நீங்கள் விரும்பும் தீபாவளி வாழ்த்துகள் ஸ்டிக்கர் பேக்கைத் தேடி பதிவிறக்கம் செய்யவும்.
* மீண்டும் சாட்டுக்கு சென்று பதிவிறக்கம் செய்யப்பட்ட ஸ்டிக்கர்களை அனுப்பலாம்.
உங்கள் சொந்த தீபாவளி ஸ்டிக்கர்களை உருவாக்குங்கள்
* உங்கள் தொலைபேசியில் ‘ஸ்டிக்கர் மேக்கரை’ பதிவிறக்கி நிறுவவும்.
* பிறகு தீபாவளி வாழ்த்து படங்களைத் தேடி பதிவிறக்கம் செய்யவும்.
* பயன்பாட்டைத் திறந்து “புதிய ஸ்டிக்கர் பேக்கை உருவாக்கு” விருப்பத்தை க்ளிக் செய்யவும்.
* உங்கள் விருப்ப ஸ்டிக்கர் பேக்கிற்கு ஒரு பெயரைச் சூட்டுங்கள்.
* இப்போது ‘ஸ்டிக்கர் சேர்’ பட்டனை க்ளிக் செய்யவும்.
* உங்கள் கேலரியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை கஸ்டமைஸ் செய்யத் தொடங்கலாம்.
* முதல் ஸ்டிக்கரை செய்து முடித்ததும், நீங்கள் உருவாக்கும் ஸ்டிக்கர் பேக்கை விரிவுபடுத்தும் பலவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
* முடிந்ததும், நீங்கள் ‘ஸ்டிக்கர் பேக்கை வெளியிடு’ பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
* இந்த கஸ்டமைஸ் ஸ்டிக்கர் பேக் பின்னர் உங்கள் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் நூலகத்தில் காண்பிக்கப்படும். அங்கிருந்து சாட்டுக்கு சரியான ஸ்டிக்கரைத் தேர்ந்தெடுத்து உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பலாம்.
https://open.spotify.com/show/3qdrz0Kb0wRugR0FLgDg5t
இது தவிர, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தீபாவளி வாழ்த்து GIF படத்தையும் அனுப்பலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.