/indian-express-tamil/media/media_files/2024/10/30/RGajgOGitcHiyU2xN6Hy.jpg)
இந்த தீபாவளிக்கு உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு பிரீமியம் லுக் தரும் டெக் பொருட்களை பரிசளித்து மகிழுங்கள். கோல்டன் நிறம் எப்போதும் எலைட் மற்றும் பிரீமியம் லுக் தரும். அந்த வகையில் கோல்ட் நிற டெக் பொருட்கள் பற்றி பார்ப்போம்.
Samsung Galaxy A16
கோல்ட் நிற ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் விலையுயர்ந்ததாக இருக்கும். ஆனால் சாம்சங்கின் ஸ்மார்ட்போன் அப்படியல்ல. Galaxy A16 ரூ.18,999 ஆகும். இது சமீபத்திய 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். டிரிபிள் கேமரா அம்சம் கொண்டது.
/indian-express-tamil/media/media_files/2024/10/30/37rKurzEj0cARZNGMhkU.webp)
Samsung Galaxy Ring
Galaxy Ring கோல்ட் நிறத்தில் வடிவமைக்கவில்லை என்றாலும், டைட்டானியம் கோல்ட் வெரியண்ட் கோல்ட் நிறம் போல் தோற்றமளிக்கிறது மற்றும் ஒன்பது வெவ்வேறு சைஸ் உடன் வருகிறது.
AI-ல் இயங்கும் fitness and wellness அம்சங்களுடன் சந்தையில் மிகவும் பிரீமியம் தோற்றமளிக்கும் ஸ்மார்ட் ரிங்க்களில் இதுவும் ஒன்றாகும். இருப்பினும் விலை சற்று அதிகமாக 38,999 விலையில் வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/10/30/nCGpKVgTtP1YaER5axAj.webp)
iPhone 16 Pro
ஆப்பிளின் சமீபத்திய ஸ்மார்ட்வாட்ச் - டைட்டானியத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வாட்ச் சீரிஸ் 10, கோல்டன் ஃபினிஷிலும் கிடைக்கிறது. நீங்கள் ஆப்பிள் வாட்ச் 10-ன் கோல்டன் நிற வாட்ச் வாங்கப் போகிறீர்கள் என்றால், அதை மிலனீஸ் லூப்புடன் இணைக்கலாம், இது இன்னும் பிரீமியமாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/30/q5dwIj5aBCLxvJx01KPd.webp)
மைக்கேல் கோர்ஸ் ஸ்மார்ட்வாட்ச்
ப்ரீமியம் பிராண்டான மைக்கேல் கோர்ஸில் கோல்டன் நிற ஸ்மார்ட்வாட்ச் உள்ளது. இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் பயன்படுத்தலாம். மல்டி டிசைன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது, இந்த ஸ்மார்ட்வாட்ச் Google வழங்கும் WearOS இல் இயங்குகிறது மற்றும் பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் எளிதாக பயன்படுத்த முடியும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/30/E2Ymzux9kVYMduaA4jur.webp)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us