/indian-express-tamil/media/media_files/2025/10/15/samsung-galaxy-smartphones-2025-10-15-17-20-52.jpg)
ரூ.7,999 முதல் சாம்சங் கேலக்ஸி போன்கள்; ஆளுக்கு ஒண்ணு தூக்குங்க மக்களே!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனது முன்னிலை நிலையை மீண்டும் உறுதிப்படுத்த சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு 4 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஓ.எஸ். அப்டேட்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இதன் மூலம் வாங்கும் புதிய சாம்சங் போன் அடுத்த சில ஆண்டுகளுக்கு எளிதாக நீடித்து உழைப்பதை உறுதி செய்கிறது. இந்த தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு விலைப்பிரிவுகளில் கிடைக்கும், நீண்ட கால ஓ.எஸ். அப்டேட் ஆதரவுடன் கூடிய சிறந்த சாம்சங் ஸ்மார்ட்போன் டீல்கள் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
1. கேலக்ஸி எஃப்-06 (Galaxy F06)
சாம்சங் நிறுவனத்தின் ரூ.10,000-க்குக் குறைவான முதல் பட்ஜெட் 5G மாடலான Galaxy F06, மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12 5G பேண்டுகளையும், வழக்கமாக உயர்ரக போன்களில் மட்டுமே காணப்படும் Carrier Aggregation அம்சத்தையும் ஆதரிக்கிறது. 6.7 இன்ச் HD+ PLS LCD டிஸ்பிளேயுடன் வரும் இந்த ஃபோன், 4GB RAM+128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ப்ளிப்கார்ட்டில் ரூ.7,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1,000 கூடுதலாகச் செலுத்தி 6GB RAM வேரியண்ட் வாங்கலாம். இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஒன் UI 7ல் இயங்குகிறது. சாம்சங் இதற்கு 4 வருட ஓ.எஸ். அப்டேட்களையும் பாதுகாப்புப் பேட்ச்களையும் உறுதியளிக்கிறது. 25W வேகமான சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி உள்ளது.
2. கேலக்ஸி எஃப் 36 (Galaxy F36)
சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பட்ஜெட் ஃபோனான கேலக்ஸி எஃப்36, Exynos 1380 சிப்செட் மற்றும் கொரில்லா கிளாஸ் Victus+ பாதுகாப்புடன் கூடிய 6.7 இன்ச் 120Hz sAMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் சிறப்பு இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான One UI 7-ல் இயங்குகிறது, மேலும் 6 வருட ஓ.எஸ். அப்டேட்களைப் பெறும் என்று சாம்சங் உறுதியளித்துள்ளது. பட்ஜெட் பிரிவில் இந்த அளவிலான ஆதரவை வேறு எந்த நிறுவனமும் வழங்குவதில்லை. 50MP பிரதான கேமரா, 8MP அல்ட்ராவைடு, 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 5,000mAh பேட்டரி (25W சார்ஜிங்) ஆகியவை இதன் அம்சங்கள். இதன் அடிப்படை வேரியண்ட் (6GB RAM, 128GB) தற்போது ரூ.13,999-க்கு ப்ளிப்கார்ட்டில் கிடைக்கிறது.
3. கேலக்ஸி ஏ35 (Galaxy A35)
ஏ.ஐ. அம்சங்களுடன் நல்ல புகைப்படங்கள் எடுக்கக்கூடிய நடுத்தர ரக போனைத் தேடுபவர்களுக்கு கேலக்ஸி ஏ35 சிறந்த தேர்வாக இருக்கும். Exynos 1380 சிப்செட், 6.6 இன்ச் 120Hz sAMOLED டிஸ்பிளேயுடன் வருகிறது. இந்த ஐ.பி67 தரச்சான்றிதழ் பெற்ற ஃபோன் தூசி, நீர் எதிர்ப்பையும் வழங்குகிறது. 8GB RAM+256GB வரை ஸ்டோரேஜ் விருப்பங்கள் உள்ளன. பின்பக்கத்தில் 50MP பிரதான கேமரா, 8MP அல்ட்ராவைடு மற்றும் 5MP மேக்ரோ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 5,000mAh பேட்டரிக்கு 25W வயர்டு சார்ஜிங் ஆதரவு உள்ளது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஒன்UI 6ல் இயங்கும் இதற்கு, சாம்சங் 4 வருட ஓ.எஸ். அப்டேட்களை உறுதியளிக்கிறது. நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த ஏற்ற இந்த ஃபோன் ரூ.17,999-க்கு கிடைக்கிறது.
4. கேலக்ஸி எஸ்-24 எஃப்.இ (Galaxy S24 FE)
சாம்சங்கின் ஃபிளாக்ஷிப் அம்சங்களை மலிவான விலையில் வழங்கும் Fan Edition (FE) மாடலான Galaxy S24 FE, Exynos 2400e சிப்செட் மற்றும் 6.7 இன்ச் 120Hz sAMOLED டிஸ்பிளேயுடன் வருகிறது. இது சமீபத்திய கேலக்ஸி எஸ் சீரிஸ் மாடல்களைப் போலவே, 7 வருட ஓ.எஸ். அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு பேட்ச்களை பெறுகிறது. 50MP பிரதான கேமரா, 8MP டெலிஃபோட்டோ சென்சார் (3x ஆப்டிகல் ஜூம்), 12MP அல்ட்ராவைடு ஷூட்டர் ஆகியவை இதன் கேமரா அமைப்பு. 25W வயர்டு சார்ஜிங்குடன், 15W வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. இதன் விலை ரூ.30,999.
5. கேலக்ஸி எஸ்-24 (Galaxy S24)
உண்மையான ஃபிளாக்ஷிப் அனுபவத்தை விரும்புபவர்களுக்கு, ஸ்னாப்டிராகன் கேலக்ஸி எஸ்-24 தற்போது ப்ளிப்கார்ட்டில் ரூ.39,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Snapdragon 8 Gen 3 சிப்செட் உடன், 6.2 இன்ச் 120Hz sAMOLED டிஸ்பிளே கொண்ட இது, ஐ.பி-68 தரச்சான்றுடன் வருகிறது. சாம்சங் இதற்கு 7 வருட ஓ.எஸ். அப்டேட் வழங்குகிறது. 50MP முதன்மை சென்சார், 10MP டெலிஃபோட்டோ, 12MP அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவை இதன் கேமரா பலமாகும். சிறிய 4,000mAh பேட்டரி இதன் பலவீனமாக இருந்தாலும், பட்ஜெட்டில் உண்மையான ஃபிளாக்ஷிப் மாடலை வாங்க இதுவே சரியான தருணம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.