Diwali WhatsApp messages, quotes, Diwali WhatsApp stickers : தீபாவளி அன்று காலையில், தலைக்கு எண்ணெய் வைத்த கையுடன், நம் நண்பர்கள், உறவினர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் வாழ்த்துகள் அனுப்ப ஆரம்பித்துவிடுவோம். சூப்பரான வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்களை எப்படி உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு டவுன்லோட் செய்து அனுப்ப வேண்டும் என்று எளிய முறையே உங்களுக்கு இங்கே விளக்குகின்றோம். யூஸ்ஃபுல்லா இருந்தா இந்த ஸ்டெப்ஸ்சை நீங்க ஃபாலோ பண்ணுங்க.
தீபாவளி வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள் டவுன்லோடு செய்வது எப்படி?
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் என இரண்டு போன்களிலும் இந்த வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்களை டவுன்லோட் செய்து ஷேர் செய்து கொள்ள இயலும்.
லேட்டஸ்ட் வெர்ஷன் வாட்ஸ்ஆப்பினை டவுன்லோட் செய்யுங்கள். அல்லது லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் கொடுங்கள்.
உங்களின் வாட்ஸ்ஆப் திரைக்கு செல்லுங்கள். அதில் எமோஜி ஐகான் பேனலுக்கு செல்லுங்கள். அதில் கீழே ஜிஃப் மற்றும் ஸ்டிக்கர்களுக்கான சிம்பள்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஸ்டிக்கர்கள் பகுதியில் உங்களுக்கு விருப்பமான தீபாவளி வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்களை தேர்வு செய்து உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்புங்கள்.
நீங்கள் தேடும் ஸ்டிக்கர்கள் கிடைக்கவில்லை என்றால் முதலில் கூகுள் ப்ளே ஸ்டோர் செல்லுங்கள். தீபாவளி வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்களை தேடுங்கள். மூன்றாவது பார்ட்டி வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள் அங்கு நிறைய இருக்கும். உங்களுக்கு விருப்பமான ஸ்டிக்கர்களை நீங்கள் தேர்வு செய்து அனுப்பிக் கொள்ளலாம்.
ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு கொஞ்சம் சிரமங்கள் இருப்பது உண்மை தான். ஆண்ட்ராய்ட் போன்களில் இருக்கும் வசதிகள் ஆப்பிளில் கிடைப்பதில்லை என்பது உண்மை தான். உங்கள் நண்பர்களிடம் இருந்து ஸ்டிக்கர்களை அனுப்ப சொல்லி அதை நீங்கள் ஷேர் செய்து கொள்ளலாம்.