Advertisment

சூரியனின் மேற்பரப்பு இப்படித்தான் இருக்குமா? ஆச்சரியமடைய வைக்கும் புகைப்படங்கள்!

DKIST டெலெஸ்கோப்  23 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் சூரியன் நிகழ்வுகளை புகைப்படங்களாக எடுத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Highest Resolution Images of the Sun captured

Highest Resolution Images of the Sun captured

Highest Resolution Images of the Sun captured : இந்த அண்டத்தில் ஒவ்வொரு  துணுக்களுமே அதிசயம் தான். ஆனால் அனைத்து உயிரினங்களையும் வாழ வைக்கும் சூரியனும் மழை மேகங்களும் தான் எப்போதுமே அதிசயக்கத்தக்க விசயங்களாக விளங்குகிறது. நேசனல் சயன்ஸ் ஃபவுண்டேசன் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று ஹவாய் தீவில் Daniel K. Inouye Solar Telescope என்ற டெலஸ்கோப் ஒன்றை வைத்துள்ளது. இது முழுக்க முழுக்க விண்வெளி ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் ஒன்றாகும்.

Advertisment

DKIST தான் சூரிய குடும்பத்தை ஆராய்ச்சி செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய டெலெஸ்கோப். இந்த ஆராய்ச்சி நிறுவனம் 18 மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு  பகுதியின் மேற்பரப்பு எவ்வாறு உள்ளது என்பதை துல்லியமாக கூறக்கூடிய ஒன்றாகும். இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட டெலெஸ்கோப்புகளைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக அளவு உணர்திறன் கொண்டவை.

DKISK Highest Resolution Images of the Sun captured ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் குறித்த தகவல்கள்

DKIST டெலெஸ்கோப்பினால்  23 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் சூரியனையும் புகைப்படம் எடுக்க இயலும். சூரியனின் வளிமண்டலத்தை நாம் கொரோனா என்று அழைப்பது வழக்கம். சூரியனின் மேற்பரப்பைப் காட்டிலும், அந்த கோளின் உள்ளே 300 மடங்கு கூடுதல் வெப்பம் நிலவும். இதற்கான காரணங்களை அறிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் DKIST டெலெஸ்கோப்பினை பயன்படுத்தும் முடிவுக்கு வந்தனர். அதன் விளைவு தான் இந்த புகைப்படங்கள். இதில் காட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு பிக்சல் (அ) கட்டங்களும் டெக்சாஸ் மாகாணம் அளவிற்கு மிகப்பெரியது.

DKISK Highest Resolution Images of the Sun captured ஹவாயில் அமைந்திருக்கும் ஆராய்ச்சி மையம்

இந்த டெலெஸ்கோப்பின் உதவியுடன் இனி சூரியனின் மேற்பரப்பு, நெருப்பு அலைகள் குறித்த ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். நேசனல் சயன்ஸ் பஃவுண்டேசன் இந்த டெலெஸ்கோப்பினை உருவாக்க துவங்கிய நாளில் இருந்தே சூரியனின் மேற்பரப்பு புகைப்படங்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தான் நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம் என்று கூறுகிறார் என்.எஸ்.எஃப் இயக்குநர் ஃப்ரான்ஸ் கோர்டோவா.

மேலும் படிக்க : இந்தியாவில் அமேசான், கூகுளுக்கு சரியான போட்டியாக அமையுமா ஆப்பிள் ஹோம்பாட்?

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment