பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் திட்டம் : சமீபத்திய கட்டண திருத்தங்களைத் தொடர்ந்து ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்டவை விலை உயர்ந்து காணப்படுகின்றன.
மேலும், இந்த நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள சில திட்டங்களில் கிடைக்கும் அழைப்பு மற்றும் டேட்டா நன்மைகளை குறைத்துள்ளன. இதன் விளைவாக, இந்தியாவில் உள்ள பல தொலைத்தொடர்பு சந்தாதாரர்கள் தற்போது பி.எஸ்.என்.எல்.க்கு மாறிவருகின்றனர்.
பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் திட்டம்
இந்த திட்டத்தின் விலை 199 ரூபாய் ஆகும். இது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும், இது வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ திட்டம்
100 எஸ்.எம்.எஸ் உடன் 28 நாள்கள் செல்லுபடியாகும் இந்தத் திட்டத்தின் விலை ரூ.349 ஆகும். இந்தத் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.379 திட்டம்
ஏர்டெல் ரூ.379 திட்டத்தின் வேலிடிட்டி 1 மாதம் ஆகும். இந்தத் திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா ரீசார்ஜ்
1 மாதம் வேலிடிட்டி கொண்ட இந்தத் திட்டத்தின் விலை ரூ.379 ஆகும். திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் மற்றும் தினந்தோறும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
மற்ற தொலைதொடர்பு வழங்குநர்களுடன் ஒப்பிடும் போது, பி.எஸ்.என்.எல் ஆனது 30 நாள்களுக்கு 2GB தினசரி டேட்டாவை ரூ.199க்கு இலவச குரல் அழைப்புடன் வழங்குவதன் மூலம் தனித்து நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“