ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் திட்டங்களை புதுப்பித்துள்ளது.
இந்த நிலையில் மக்கள் விரும்பும் வகையில் புதிய ரீசார்ஜ் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 336 நாள்கள் அதாவது 11 மாதங்கள் வேலிடிட்டி ஆகும்.
மேலும், இந்த திட்டத்தில், பயனர் மொத்தம் 24 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார். இதுமட்டுமின்றி, இந்த திட்டத்தில், பயனர் 336 நாட்களுக்கு அதாவது சுமார் 11 மாதங்களுக்கு 3600 எஸ்எம்எஸ் வசதியையும் பெறுகிறார்.
தொடர்ந்து, இதில், பயனர் பல நன்மைகளையும் பெறுகிறார். இந்த திட்டத்தில், பயனர் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் இலவச சந்தாவையும் பெறுகிறார்.
குறைந்த விலையில் அதிக செல்லுபடியாகும் திட்டத்தை விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் ஒரு நல்ல தேர்வாகும். குறைவான டேட்டா மற்றும் அதிக அழைப்பு தேவைப்படுபவர்கள் இந்த திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம்.
ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது Google Pay, PhonePe அல்லது Paytm போன்ற ஆன்லைன் பேமெண்ட் ஆப்ஸிலிருந்து இந்தத் திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.
இந்தத் திட்டத்தின் விலை ரூ.1899 ஆகும். இது குறைந்த விலையில் நீண்ட கால செல்லுபடியாகும் சிறந்த மற்றும் மலிவு திட்டமாகும். இந்த திட்டத்தில் வேலிடிட்டியுடன் மற்ற நன்மைகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“