இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தினசரி 2.5ஜிபி டேட்டாவுடன் வரும் நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இருப்பினும், இவற்றில் மூன்று திட்டங்கள் 365 நாட்களுக்கு சேவை செல்லுபடியாகும்.
குறுகிய காலத்தில், 30 நாள்கள் செல்லுபடியாகும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ.349 ஆகும். ரூ.349 திட்டமானது 30 நாள்களுக்கு தினசரி 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் நன்மைகளை பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 திட்டம் 30 நாள்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது ஒவ்வொரு நாளும் 2.5ஜிபி அதிவேக எஃப்.யூ.பி (FUP) தரவு வடிவத்தில் மொத்தம் 75ஜிபி தரவை வழங்குகிறது.
இந்த திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற 5G டேட்டாவையும் பெறுகிறார்கள். மேலும், பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 SMS/நாள் ஆகியவற்றையும் பெறுகிறார்கள். கூடுதல் நன்மைகளில் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் ஆகியவை அடங்கும்.
தினமும் ரூ.11.63 செலவு
இந்த திட்டத்திற்கு தினசரி ரூ.11.63 செலவாகும். மற்ற திட்டங்களைக் காட்டிலும் இது சற்று விலை உயர்ந்ததாகத் தோன்றினாலும், நீங்கள் ஏராளமான 4G டேட்டாவைப் பெறுவீர்கள்.
மேலும், இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டாவின் சராசரி விலை ரூ.4.6 இது மிகவும் மலிவானது.இது மட்டுமின்றி, நீங்கள் ஜியோவின் 5G கவரேஜின் கீழ் இருந்தால், மெதுவாக இணையத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“