ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன.
இருப்பினும், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இன்னும் பழைய கட்டணத்தில் திட்டங்களை வழங்குகிறது.
இதில், 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 1.5ஜிபி தினசரி டேட்டா வழங்கும் இந்த நிறுவனங்களின் ப்ரீபெய்ட் திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ
ஜியோ ரூ.799 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 84 நாட்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா, மொத்தம் 126ஜிபி டேட்டா. இது வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 300 எஸ்எம்எஸ் வழங்குகிறது.
இதில், ஜியோ டிவி, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ சினிமா ஆகியவை கிடைக்கும். இந்த திட்டத்தில் வரம்பற்ற 5G டேட்டா இல்லை.
மேலும், ஜியோ அதே நன்மைகளுடன் ரூ.889 ப்ரீபெய்ட் திட்டத்தையும் கொண்டுள்ளது: தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 300 எஸ்எம்எஸ், மொத்தம் 126ஜிபி டேட்டாயும் வழங்குகிறது.
ஏர்டெல் ரீசார்ஜ்
ஏர்டெல் ரூ.859க்கு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டமானது தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.
வோடபோன் ரீசார்ஜ் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.859 விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது, இதில் 84 நாட்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா அடங்கும். நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, இந்த திட்டம் மூன்று நாட்களுக்கு கூடுதலாக 5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.485க்கு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது, ஆனால் இது 84 நாட்களுக்குப் பதிலாக 82 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“