தானியங்கி கார்களை போல் முதல் பிரத்தியேக டிரைவர் இல்லா தானியங்கி டிராக்டர் ஐ எஸ்கார்ட் நிறுவனம் இந்திய விவசாய மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு எஸ்கார்ட் நிறுவனம் விவசாய இயந்திரங்கள், பன்னை உபகரணங்கள் மற்றும் பொறியியல் சாதனங்களை இந்திய விவசாய நண்பர்களுக்கு வழங்கிய இந்திய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாய மேம்பாட்டிற்காக மிக துல்லியமான பல விவசாய எந்திரங்களை வழங்கிய எஸ்கார்ட் நிறுவனம் விவசாயத்திற்குக் கைகொடுக்கும் வகையில் தானியங்கி விவசாய எந்திரங்களைத் தயாரிக்கும் திட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன் மும்முரமாக இறங்கியது. அந்த முயற்சியின் அடையாளமாக இந்த ஆல் இல்லா தானியங்கி டிராக்டரை எஸ்கார்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
விவசாயிகளுக்கு தேவையான விவசாய நுண்ணறிவு, சிறந்த சாகுபடிக்கான மண்ணின்தன்மை, விதைகள், நீர் மேலாண்மை குறித்த தகவல்களை அளிக்கும் பொருட்டு தொழில்நுட்ப முறைகளையும், டிஜிட்டல் தளத்தையும் ஒருங்கினைத்து தருவதற்காகவே பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவிக்கும் escort, இதன் மூலம் சிறந்த சாகுபடியையும், வருவாயையும் தரமுடியும் என கூறுகிறது.
விவசாய இயந்திரங்கள், பன்னை உபகரனங்கள் மற்றும் பொறியியல் சாதனங்கள் தயாரிப்பில் முன்னோடியான ஹரியானாவைச் சேர்ந்த Escorts நிறுவனம் இந்தியாவின் முதல் தானியங்கி டிராக்டர் கான்செப்டை அறிமுகம் செய்துள்ளது.