/indian-express-tamil/media/media_files/2025/10/21/dyson-air-purifier-2025-10-21-10-20-54.jpg)
தூசி, பூஞ்சை, பாக்டீரியா.. மொத்தமாக க்ளீன்; 99.95% நுண்ணிய துகள்களை நீக்கும் டைசன் ஏர் ப்யூரிஃபையர்!
இந்தியாவில் வீடுகளின் காற்றைச் சுத்தமாக்க புதிய தொழில்நுட்ப அதிர்வை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனைச் சேர்ந்த டைசன் (Dyson) நிறுவனம். புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் 'Purifier Cool PC1-TP11' ஏர் பியூரிஃபையர், அறையின் காற்றை சுத்திகரிப்பதில் மைல்கல் என்று சொல்லலாம். இந்தச் சாதனத்தின் பிரம்மாண்ட சிறப்பம்சம் அதன் வடிகட்டுதல் தொழில்நுட்பம் தான். டைசன் நிறுவனம் கூறுவதுபடி, இந்தச் சுத்திகரிப்பான் வெறும் 0.1 மைக்ரான் அளவுள்ள மிக நுண்ணிய துகள்களில் 99.95% வரைப் பிடித்து நீக்கும் திறன் கொண்டது. அதாவது, அலர்ஜியை ஏற்படுத்தும் மகரந்தம், பாக்டீரியாக்கள், ஏன்... வைரஸ்களைக் கூட இது வடிகட்டிவிடும்.
இதில் சீல் வைக்கப்பட்ட HEPA வடிகட்டியுடன் கூடுதலாக, ஆக்டிவேட்டட் கார்பன் வடிகட்டியும் உள்ளது. இதன் வேலை என்ன தெரியுமா? சமையல் வாசனை, துர்நாற்றங்கள், நச்சு வாயுக்கள், மற்றும் அதிக மாசுபாடான நைட்ரஜன் டை ஆக்சைடு போன்ற தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உறிஞ்சி, சுத்தமான காற்றை மட்டுமே வெளி அனுப்புவதுதான். விலை ரூ.39,900 மட்டுமே. க்ளாசிக் பிளாக்/நிக்கல் மற்றும் ட்ரெண்டியான வெள்ளை/சில்வர் வண்ணங்களில் கிடைக்கிறது. டைசன் இணையதளம் மற்றும் அனைத்து டைசன் கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.
இதன் உள்ளே இருக்கும் சென்சார்கள் மிக மிக ஸ்மார்ட்டானவை. உங்க வீட்டில் தூசி, மகரந்தம் (PM2.5, PM10) போன்ற மாசுபாடுகள் எவ்வளவு இருக்கின்றன என்பதை நிகழ்நேரத்தில் கண்டறிந்து திரையில் காட்டுகிறது. டைசன் நிறுவனம், இந்தச் சாதனத்தை வெறும் ஆய்வகச் சூழலில் அல்லாமல், "உண்மையான வீட்டுச் சூழலில்" சோதனை செய்ததாகக் கூறுகிறது. இதனால், முழு அறைக்கும் தூய்மையான காற்றை வினாடிக்கு 290 லிட்டருக்கும் அதிகமான வேகத்தில் உறுதி செய்கிறது. மேலும், 350 டிகிரி கோணத்தில் சுழலும் வசதி இருப்பதால், அறையின் ஒவ்வொரு மூலைக்கும் சுத்தமான காற்று கிடைக்கும்.
தூங்கும் நேரத்திலும் உங்களுக்குத் தொந்தரவு இருக்கக்கூடாது என்பதற்காக, இதில் 'நைட் மோட்' வசதி உள்ளது. இது அமைதியான முறையில் இயங்குவதுடன், திரையின் ஒளியையும் குறைத்துவிடும். தவிர, ஸ்லீப் டைமர் செட் செய்து, 1 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை குறிப்பிட்ட நேரத்தில் இதை அணைத்துவிடவும் முடியும்.
மேலும், வைஃபை மற்றும் ப்ளூடூத் வசதிகளுடன் மைடைசன் ஆஃப் மூலம் இதை எங்கிருந்தும் இயக்கலாம். இது அலெக்ஸா, கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் சிரி போன்ற வாய்ஸ் அசிஸ்டென்ட்களுடன் இணைத்து செயல்படுவதால், உங்கள் குரல் மூலமே இதைக் கட்டுப்படுத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.