Earth Moon photographs sent by ISRO's Chandrayaan 2 so far : சந்திரயான் 2 ஜூலை மாதம் 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆர்பிட்டர் நிலவை வலம் வந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று எண்ணப்பட்ட லேண்டர் ஹார்ட் லேண்டிங் மூலமாக நிலவின் மேற்பரப்பில் வேகமாக போய் மோதியது. இதனால் லேண்டருடனான இஸ்ரோவின் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. பின்பு எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் சந்திரயான் 2 லேண்டரை தொடர்பு கொள்ள இயலவில்லை.
Earth Moon photographs sent by ISRO's Chandrayaan 2 so far
லேண்டரால் நிகழ்த்தபப்ட வேண்டிய ஆராய்ச்சி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சந்திரயான் 2 விண்கலத்தில் பொருத்தப்பட்ட கேமராக்கள் நிலவையும், நிலவில் காணப்படும் குழிகளையும் புகைப்படம் எடுத்தது. அதே போன்று விண்ணில் இருந்து பூமியையும் அது புகைப்படம் எடுத்தது. இது நாள் வரையில் சந்திரயான் 2 வெளியிட்ட புகைப்படங்கள் குறித்த ஒரு பதிவு இதோ உங்களுக்காக!
சந்திரயான் 2 எடுத்த புவியின் புகைப்படங்கள்
கீழே இருக்கும் இந்த புகைப்படங்கள் விண்வெளிக்கு சந்திரயான்-2 ஏவப்பட்டு 13 நாட்கள் ஆன நிலையில், கேமரா எல்14 (Camera L14) மூலமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகும். ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மாலை 5 மணி 15 நிமிடங்களுக்கு துவங்கி 05 மணி 37 நிமிடங்கள் வரை இந்த புகைப்படங்களை சந்திரயான் 2 எடுத்துள்ளது. அதனை பின்பு இஸ்ரோவுடன் பகிர்ந்து கொள்ள, இஸ்ரோ இந்த புகைப்படங்களை அம்மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Chandrayaan 2 Photographed earth with L14 Camera
ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மாலை 5 மணி 28 நிமிடங்களுக்கு சந்திரயான் எடுத்த புகைப்படம்
ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மாலை 5 மணி 29 நிமிடங்களுக்கு சந்திரயான் எடுத்த புகைப்படம்
ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மாலை 5 மணி 32 நிமிடங்களுக்கு சந்திரயான் எடுத்த புகைப்படம்
ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மாலை 5 மணி 34 நிமிடங்களுக்கு சந்திரயான் எடுத்த புகைப்படம்
ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மாலை 5 மணி 37 நிமிடங்களுக்கு சந்திரயான் எடுத்த புகைப்படம்
சந்திரயான் 2 வெளியிட்ட நிலவின் மேற்பரப்பு புகைப்படங்கள்
ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி சந்திரயான் 2ல் பொறுத்தப்பட்டிருந்த டெரய்ன் மேப்பிங் கேமரா 2 சந்திரனின் மேற்பரப்பினை புகைப்படம் எடுத்து அனுப்பியது. பல்வேறு துறையில் செயல்பட்ட புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களின் பெயரை ஒவ்வொரு பள்ளத்திற்கும், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
மேலும் படிக்க : நிலவில் இருக்கும் பள்ளங்களுக்கும் பெயர்கள் வைக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?
Chandrayaan 2 photographed lunar craters
ஆர்னால்ட் சோமர்ஃபெல்ட் (ஜெர்மனி), டேனியல் க்ர்க்வூட் (அமெரிக்கா), ஜான் ஜாக்சன் (ஸ்காட்லாந்து), எர்ன்ஸ்ட் மாச் (ஆஸ்திரியா), செர்கெய் கொரொலெவ் (சோவியத் யூனியன்), சிசிர் மித்ரா ( இந்தியா), ஜான் ப்ளாஸ்கெட் (கனடா), திமித்ரி ரோஸ்தெஸ்வென்ஸ்கி (சோவியத் யூனியன்), சார்லஸ் ஹெர்மிட் (ஃப்ரான்ஸ்) – போன்ற அறிஞர்களின் பெயர்கள் இதுவரை சூட்டப்பட்டுள்ளது.
சந்திரயான் 2 வெளியிட்ட நிலவின் புகைப்படங்கள்
1973ம் ஆண்டு சர்வதேச விண்வெளியார்களுக்கான யூனியனில் எடுக்கப்பட்ட முடிவின் படி, விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்து விளங்கிய, விளங்கும் ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் வைக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது, நிலவில் இருக்கும் மலைகளுக்கும் பெயர்கள் வைக்கப்பட்டு வருகிறது.
சந்திரயான் 2 வெளியிட்ட நிலவின் புகைப்படங்கள்
இந்நிலையில் கடந்த அக்டோபர் 4ம் தேதியன்று சந்திரயான் 2-ன் ஆர்பிட்டர் ஹை ரெசலியூசன் கேமரா மூலமாக மிகவும் துல்லியமான புகைப்படங்கள் எடுக்கப்பட்டு இஸ்ரோவுடன் பகிர்ந்து கொண்டது ஆர்பிட்டர். 100 கி. மீ அப்பால் இயங்கும் ஆர்பிட்டர் மூலமாக எடுக்கப்ப்பட்ட மிகவும் துல்லியமான நிலவின் தென்துருவ புகைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆராய்ச்சிகள் மூலமாக நமக்கு நிலவு குறித்து பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/EGC4GYHU0AACo-F.png)