தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. விவசாயம் மற்ற பிற தொழில்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் அனைத்து பயனர்களும் மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என அரசு அறிவிக்கப்பட்டது. மின்சாரம் முறைகேட்டை தடுக்க மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஆணை பிறப்பித்தது. நேரடியாக அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது ஆன்லைன் மூலமாக EB எண்ணுடன் ஆதார் எண் இணைக்கலாம்.
ஆன்லைனில் அரசின் (TANGEDCO) இணையதளத்தில் ஆதார் எண் இணைப்பது குறித்து பார்க்கலாம்.
https://www.tnebltd.gov.in/adharupload/ என்ற அதிகாரப்பூர்வ லிங்க்-ஐ பயன்படுத்தி ஆன்லைனில் ஆதார் எண் இணைக்கலாம்.
- மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி இணைய பக்கத்திற்கு செல்லலாம். அல்லது கூகுளில் TN EB, TANGEDCO என டைப் செய்து அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லலாம்.
2. TANGEDCO முகப்பு பக்கத்தில் ஆதார் எனக் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது ஆதார் பக்கத்தில் service connection number என கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்கள் மின்சார service number பதிவிட வேண்டும். இந்த நம்பர் உங்கள் மின் கட்டண அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும்.
- அடுத்ததாக, மின் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் உங்கள் மொபைல் நம்பர் பதிவிட வேண்டும். அதற்கு OTP அனுப்பபடும்.
- எந்த எண்ணிற்கு OTP அனுப்பபட்டுள்ளது என்பது பற்றி விவரம் கொடுக்கப்பட்டிருக்கும், அதற்கு கீழ் உள்ள பாக்ஸில் உங்களுக்கு வந்த OTP எண்ணை பதிவிட்டு Validate OTP என்ற ஆப்ஷனை கொடுக்க வேண்டும்.
- அடுத்ததாக, சில தகவல்கள் வரும். மின் இணைப்பு யாருடைய பெயரில் உள்ளது, service number என்ற விவரங்கள் வரும். அதோடு நீங்கள் யார் என்பதை குறிப்பிட வேண்டும். உரிமையாளர் (Owner), குடியிருப்பவர் (Tenent), மற்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை தேர்ந்தெடுத்து கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது, உங்கள் ஆதார் எண், ஆதாரில் உள்ளது போல் உங்கள் பெயர் பதிவிட வேண்டும்.
8.'Browse' என ஒரு ஆப்ஷன் இருக்கும் அங்கு ஆதாரை 500kb அளவிற்கு மாற்றி பதிவிடவும். அதை பதிவிட்டு submit கொடுக்க வேண்டும்.
அவ்வளவு தான், இப்போது நீங்கள் தகவல்களை பதிவிட்டுள்ளீர்கள். ஆதார்-EB எண் இணைக்கப்பட்டவுடன் உங்கள் மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil