Advertisment

TANGEDCO News: ஆதார்- இ.பி இணைக்க ஈசி ஸ்டெப்ஸ்; இதை ஃபாலோ பண்ணுங்க!

ஆதார்- இ.பி நம்பரை ஆன்லைன் மூலம் எளிதாக இணைக்கலாம். TANGEDCO இணையதளம் மூலம் இணைப்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tneb

தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் - ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம், விவசாயம் மற்ற பிற தொழில்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில்

அனைத்து பயனர்களும் இ.பி நம்பருடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது.

Advertisment

இதைத் தொடர்ந்து அரசின் TANGEDCO இணையதளம் மூலம் ஆதார்- இ.பி நம்பர் எளிதாக இணைக்கலாம். முன்னதாக உங்கள் ஆதார் கார்டு நகலை 500kb அளவிற்கு மாற்றி தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

  1. www.tangedco.gov.in என்ற இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு உங்களுடைய மின் இணைப்பு நம்பர் (service number) , மின் இணைப்பு அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் போன் நம்பர் பதிவிட வேண்டும்.
  3. இதன் பிறகு உங்கள் செல்போன் போன் எண்ணிற்கு OTP அனுப்பபடும்.
  4. OTP நம்பர் பதிவிட்ட பின், பயனாளரின் பெயர், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும்.
  5. மின் இணைப்பு எண் வீட்டின் உரிமையாளருடையதா, வாடகைதாரருடையதாக என்று விவரம் கேட்கப்படும். அதை நீங்கள் குறிப்பிட வேண்டும்.
  6. ஆதார் எண்ணில் இருக்கும் பெயரை பதிவிட வேண்டும்.
  7. ஆதாரை 500kb அளவிற்கு பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  8. இறுதியாக submit என்ற பட்டனை கிளிக் வேண்டும்.
  9. விரைவில் மின் இணைப்பு எண்- ஆதாருடன் இணைக்கப்படும் என்ற தகவல் திரையில் வரும்.

இந்தநிலையில் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் இணைக்க தமிழக அரசு சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். நாளை நவம்பர் 28 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை மின் வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment