/tamil-ie/media/media_files/uploads/2023/07/New-Project37-1.jpg)
Elon Musk
ட்விட்டரின் பிரபலமான லோகோவான நீலக் குருவி மாற்றப்பட்டு X என ரீபிராண்டிங் செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் இந்த லோகோ மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
புதிய லோகோ பிட்ச் பிளாக் பின்னணியில் வெள்ளை நிறத்தில் X என எழுதப்பட்டுள்ளது. முதலில் வெப் வெர்ஷனில் இந்த லேகோ மாற்றம் செய்யப்படுள்ளது.
இந்த திடீர் மாற்றம் உலகையே யூகிக்க வைத்திருக்கும் நிலையில் ட்விட்டர் X பெயர் மாற்றம் குறித்து அதன் உரிமையாளர் எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார். X என்பதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய மஸ்க், X என்பது தனது லட்சியமான அனைத்தையும் உள்ளடக்கிய தளமான ‘எல்லாமே செயலி’என்பதை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என்றார்.
It’s an exceptionally rare thing – in life or in business – that you get a second chance to make another big impression. Twitter made one massive impression and changed the way we communicate. Now, X will go further, transforming the global town square.
— Linda Yaccarino (@lindayacc) July 23, 2023
இனி மேல் ட்விட்டர் செயலியில் கிட்டத்தட்ட அனைத்தையும் பதிவிடும் வகையில் மாற்றப்படும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.