Advertisment

இது ட்விட்டரா இல்ல வாட்ஸ் அப் ஆ? செம்ம அப்டேட் கொடுத்த எலான் மஸ்க்

இது ட்விட்டரா இல்ல வாட்ஸ் அப் ஆ? என கேட்கும் அளவுக்கு சூப்பரான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் உலக பணக்காரர் எலான் மஸ்க்

author-image
WebDesk
Aug 31, 2023 19:22 IST
Twitter Logo 'X'

Twitter Logo 'X'

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ட்விட்டர் சமூக வலைதளத்தை உலக பணக்காரர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு புதுமைகளை புகுத்தினார். ட்விட்டர் நிறுவனத்தில் பணியில் இருந்து தலைமை செயல் அதிகாரி வரை பணியை விட்டு நீக்கினார்.

Advertisment

பல ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்தார். மேலும் ட்விட்டர் முகப்பு பக்கத்தை நாயிடம் புகைப்படம் இருப்பது போல் மாற்றினார்.

தற்போது ட்விட்டர் எக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் எலான் மஸ்க் ட்விட்டரில் செம்ம அப்பேடட் ஒன்றை வழங்கியுள்ளார்.

அதன்படி, “இனி ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஆடியோ, வீடியோ கால்கள் வசதிகள் ஏற்படுத்தப்படும். இதற்கு போன் நம்பர் தேவை இல்லை.

ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, மேக் மற்றும் கணினியில் இந்த வசதி செயல்படுத்தப்பட உள்ளது” என ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Elon Musk #Technology #Twitter
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment