சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை வாங்க முடிவு செய்த உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், 44 பில்லியன் டாலர் மதிப்பு உள்ள ட்விட்டர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகத்திற்கு முன்னதாக 20% சரிந்தது. இது குறித்து கருத்து தெரிவிக்க கேட்டபோது, ட்விட்டர் உடனடியாக பதிலளிக்கவில்லை.
ட்விட்டரில், ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்த நிலுவையில் உள்ள விவரங்களை சுட்டிக் காட்டி, ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான 44 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலோன் மஸ்க் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
“ஸ்பேம் / போலி கணக்குகள் உண்மையில் 5% க்கும் குறைவான பயனர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்ற கணக்கை உறுதி செய்யும் தகவல்கள் நிலுவையில் உள்ளதால், ட்விட்டர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று எலான் மஸ்க் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரின் பங்குகள் வர்த்தகத்தின் தொடக்கத்தில் 20% சரிந்தன. இது குறித்து கருத்து கேட்பதற்கான வேண்டுகோள்க்கு ட்விட்டர் உடனடியாக பதிலளிக்கவில்லை.
ட்விட்டர் நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில், தவறான அல்லது ஸ்பேம் கணக்குகள் முதல் காலாண்டில் ட்விட்டரின் பணமாக்கக்கூடிய தினசரி செயலில் உள்ள பயனர்களில் 5% க்கும் குறைவாகவே இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.
எலான் மஸ்க் உடனான ஒப்பந்தம் முடிவடையும் வரை, விளம்பரதாரர்கள் தொடர்ந்து ட்விட்டரில் செலவிடுவார்களா என்பது உட்பட பல ஆபத்துகளை எதிர்கொண்டதாகவும் ட்விட்டர் நிறுவனம் கூறியது.
உலகின் மிகப் பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான எலன் மஸ்க், ட்விட்டர் தளத்தில் இருந்து ஸ்பேம் கணக்குகளை அகற்றுவதே தனது முன்னுரிமைகளில் ஒன்று என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்த நிலுவையில் உள்ள விவரங்களை சுட்டிக் காட்டி, ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான 44 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலோன் மஸ்க் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"